Home » Home 01-02-23

வணக்கம்

மெட்ராஸ் பேப்பரை ஏன் அச்சிதழாகக் கொண்டு வரக் கூடாது?

இந்தக் கேள்வியை அநேகமாக வாரம் ஒருவராவது கேட்கிறார். தமிழில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் அச்சிதழ்களே தமது அந்திமத்தைக் காணத் தொடங்கியிருக்கும் நிலையில் புதிதாகத் தொடங்கப்பட்ட இணைய இதழ் ஒன்றினை அச்சில் கொண்டுவருவது என்பது பல நடைமுறைச் சிக்கல்களை உள்ளடக்கியது. அதில் முதலும் பெரிதுமானது, பொருளாதாரம். மாத இதழ், காலாண்டிதழ் என்றால்கூடச் சிறிது தப்பிக்க முடியும். இணைய வார இதழை அச்சில் கொண்டு வருவது என்பது எளிதல்ல.

இணைய இதழாகவேகூட இது நீடித்திருக்க சந்தாதாரர்களின் எண்ணிக்கை பெருகவேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் இது கதைகளாலும் கவிதைகளாலும் சினிமா செய்திகளாலும் நிறைந்த பத்திரிகை அல்ல. அற்பக் கேளிக்கை அம்சங்களை முற்றிலுமாக விலக்கி வைத்துவிட்டு உலக அளவில் நிகழும் முக்கியமான சம்பவங்கள் அனைத்தைக் குறித்தும் நாம் எழுதுகிறோம். அரசியல், அறிவியல், பொருளாதாரம், நிதி, வர்த்தகம், சமூகம், கலை, இலக்கியம் என ஒவ்வொரு துறை சார்ந்தும் கனமிகு கட்டுரைகளை ஆகச் சுலபமாக வாசிக்கத்தக்க மொழியில் தருகிறோம்.

வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதாகப் பெரும்பான்மை சமூகம் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு புதிய, தரம்மிக்க வாசகர் சமூகத்தையே உருவாக்கும் பணியில் மெட்ராஸ் பேப்பர் ஈடுபட்டிருக்கிறது. இப்பெரும் பணியில் எங்களோடு தோள்சேரத்தான் உங்களை வேண்டுகிறோம்.

மெட்ராஸ் பேப்பரைத் தொடர்ந்து வாசிக்கும் உங்களுக்கு இது பிடித்திருக்குமானால் உங்கள் நண்பர்களுக்கு நமது இதழைப் பரிந்துரை செய்யுங்கள். உறவினர்கள், நண்பர்கள், அன்பர்களுக்குப் பிறந்த நாள், திருமண நாள் வருமானால் ஒரு மெட்ராஸ் பேப்பர் சந்தாவை நீங்கள் அவர்களுக்குப் பரிசாகத் தரலாம். நாநூறு ரூபாய் ஆண்டுச் சந்தா என்பது பெரிய தொகையல்ல. நல்ல உணவகம் சென்று ஒருவேளை உண்டால்கூட இதனைக் காட்டிலும் அதிகம் செலவாகும் என்பதை அறிவீர்கள்.

உங்களிடம் நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை இதுதான். மெட்ராஸ் பேப்பர் அடுத்தடுத்த உயரங்களை எட்ட உங்கள் ஒத்துழைப்பு ஒன்றுதான் மூலக் காரணியாக இருக்க முடியும். இதன் ஒவ்வொரு வாசகரும் ஒரு புதிய சந்தாதாரரையேனும் கொண்டு வருவது ஒன்றே இந்த இதழ் தழைக்க வழி.

செய்வீர்கள் அல்லவா?

  • உற்றுப் பார்

    உலகம்

    ஓயா ஊழலும் தீராத நல்லுறவும்

    அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்குக் கடந்தசில வாரங்களாய் ஒழுங்காய்த் தூக்கம் இருக்கவில்லை. டென்ஷனில் நகம் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார்கள். காரணம்...

    உலகம்

    அமெரிக்க மாணவர் போராட்டம்: அது வேறு, இது வேறு!

    திருச்சி செயிண்ட் ஜோசஃப் கல்லூரி கிளைவ்ஸ் விடுதியில் மாணவர்கள் தடியடி பட்டதை தமிழ்நாட்டில் யாரும் இன்னமும் மறந்திருக்க மாட்டார்கள். 25 வருடங்கள் முன்...

    நம்மைச் சுற்றி

    நம் குரல்

    இதுவும் இயற்கைப் பேரிடர்தான்!

    இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம்...

    ரசனை

    சுற்றுலா

    நல்லிணக்கக் குப்பைகள்

    மிக உயரமான ஒரு மலையைச் சுற்றிச் சாதாரணமாக எவ்வளவு குப்பை சேரும்? இலங்கையின் மத்தியில் அமைந்திருக்கிறது ‘சிவனொளிபாத மலை’. அதன் அடிவாரத்திலும்...

    சுற்றுலா

    போரா குஹாலு: பள்ளத்தாக்கில் ஒரு புராதன உலகம்

    அரக்குப் பள்ளத்தாக்கு. தமிழ் நாட்டிற்கு ஏற்காடு, ஏலகிரி போல, விசாகப்பட்டினத்துக்கு அருகில் இருக்கும் குட்டி மலைப்பகுதி இது. விசாகப்பட்டினத்திலிருந்து...

  • தொடரும்

    aim தொடரும்

    AIM IT – 3

    அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறையின் முக்கிய அங்கம் இவர். அவருக்கொரு செல்வமகள். தன் தந்தை ரோனன் சொல்லும் கதைகளைக் கேட்டால் தான் அச்சிறுகுழந்தைக்குத் தூக்கம் வரும். வழமை போலவே...

    Read More
    G தொடரும்

    G இன்றி அமையாது உலகு – 3

    3. இருவர் ஒரே வருடத்தில் பிறந்திருந்தாலும், அந்த இருவருக்கும் பிறந்த தேசங்கள் வேறு. தாய்மொழி வேறு. வளர்க்கப்பட்ட விதம் வேறு. குணங்கள் வேறு. ஆனால் இருவருக்குள்ளும் சிறு வயதிலிருந்து கணினி மீதான ஆர்வமும், புலமையும், அதில் ஏதேனும் பெரிதாக சாதிக்கவேண்டும் என்ற வேட்கையும், என்ன செய்யப்போகிறோம் என்ற...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை – 3

    3. சம்பள ஆராய்ச்சி நமக்குப் பணத்தைக் கொண்டுவரும் குழாய்களை வருவாய் மூலங்கள் அல்லது வழிகள் (Income Sources/Channels) என்கிறார்கள். இதை நாம் எளிமையாகப் ‘பணவழிகள்’ என்று சொல்வோம். எடுத்துக்காட்டாக, ஒருவர் அலுவலகம் சென்று வேலை பார்த்துச் சம்பளம் பெறுகிறார், இன்னொருவர் கடை வைத்துப் பொருட்களை...

    Read More
    உரு தொடரும்

    உரு – 3

    பள்ளிக்கூடம் போகாமலே… முத்துவின் அம்மாவுக்குத் தையல் கடை வேலை, வீட்டு வேலை எல்லாம் போக வேறொரு சிறப்பு வேலை இருந்தது. பிள்ளைகளைத் தேடும் வேலை. முத்துவையும் அவர் தங்கையையும் அக்கம்பக்கத்தில் உள்ளோர் தூக்கிக் கொண்டுபோய் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இருவருமே கொஞ்சம் வெளிர்நிறத் தோலுடையவர்கள்...

    Read More
    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 98

    98 ஹீரோ ஓரிரு இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களில் தட்டுப்பட்ட, தன் புத்தக வெளியீட்டு விழாவில் பார்த்த முகத்தை பஸ்ஸில் பார்த்தது கொஞ்சம் பரபரப்பாக்கிவிட்டது. பெண்களை முன்பின் பார்க்காதவனோ பழகாதவனோ இல்லை என்றாலும் இந்தப் பெண் சற்றே வெட்கத்துடன் சிரித்ததைப்போலத் தோன்றியது வேறு  ஆர்வத்தைக் கூட்டிவிட்டது...

    Read More
    சாத்தானின் கடவுள் தொடரும்

    சாத்தானின் கடவுள் – 3

    3. இரு வேறு ஃபாரினர்ஸ் இன்னும் ஓர் இடமாற்றம். வேறொரு கிராமம். மற்றுமொரு பள்ளி. இப்போது நான் வளர்ந்த சிறுவன். நான்காம் வகுப்புக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். கேளம்பாக்கம் பஞ்சாயத்து ஒன்றியத் தொடக்கப்பள்ளி. இந்தத் தொடக்கப்பள்ளிக் கட்டடம் இருக்கும் அதே வளாகத்துக்குள்ளேயே அப்பா மாற்றலாகி வந்திருக்கும்...

    Read More
    error: Content is protected !!