28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...
வணக்கம்
இந்த இதழைப் பகுதியளவு ‘இயர் புக்’ என்று சொல்லலாம். பல்வேறு தேசங்களில் இந்த ஆண்டு நடைபெற்ற முக்கியமான அரசியல்-சமூக-பொருளாதார நிகழ்வுகளின் சுருக்கமான தொகுப்பாக இது அமைந்திருக்கிறது. வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் நமது செய்தியாளர்கள் இப்பகுதியினைச் சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.
பெருந்தொற்றுக்குப் பிறகு உலக நாடுகள் சந்திக்க நேர்ந்த பொருளாதார வீழ்ச்சி, அதில் இருந்து மீளப் படுகிற பாடு இவற்றைப் பல பில்லியன் டாலர்கள் செலவழித்து ரஷ்யா நடத்திக்கொண்டிருக்கும் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு அருகே வைத்துப் பார்க்கலாம். உலகின் பெரும்பாலான தேசங்கள் உக்ரைனை ஆதரிப்பது உண்மையென்றால் யுத்தத்துக்குச் செய்கிற உதவிகளை ஏன் போர் நிறுத்தத்துக்குச் செய்ய முன்வரவில்லை என்பதையும் அருகே இருத்தி நோக்கலாம்.
எதையும் யாரும் தடுத்து நிறுத்திவிட முடிவதில்லை. எதையும் என்றால் இழப்புகளை. அவலங்களை. யுத்தங்களை. வல்லரசுகள் மேலும் வலு சேர்க்கும் முனைப்புடனும், நலிவுற்ற தேசங்கள் தப்பிப் பிழைக்கும் வேட்கையுடனும் மட்டுமே எக்காலத்திலும் இயங்கிவந்திருக்கின்றன. எதுவும் மாறப் போவதில்லை.
ஆப்கனிஸ்தானை எடுத்துக்கொள்ளுங்கள். தாலிபனை ஒழித்துக்கட்டாமல் ஓயப் போவதில்லை என்று அறிவித்துவிட்டுத்தான் அமெரிக்கா யுத்தத்தையே அங்கே தொடங்கியது. இறுதியில் அதே தாலிபனிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள். என்ன மாறுதல் நிகழ்ந்திருக்கிறது? ஒன்றுமேயில்லை. அதே அடிப்படைவாதம். அதே சர்வாதிகாரம். காலத்துக்கு ஒவ்வாத சட்டங்கள். தேசம் சின்னாபின்னமடைந்துவிட்டது குறித்த எளிய கவலைகூட இல்லாமல் இந்த ஓராண்டுக் காலத்தைத் தம் வழக்கப்படி ஓட்டிக் கடந்துவிட்டார்கள் தாலிபன்கள். இனியும் அப்படியேதான் இருக்கப் போகிறார்கள். சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அமெரிக்காவோ ரஷ்யாவோ சீனாவோ படையெடுக்கும். அதற்கு ஏதாவது ஒரு காரணம் அப்போது வரும். மக்களின் அடிப்படைத் துயரங்கள் என்றென்றும் அப்படியேதான் இருக்கும்.
ஆப்கனிஸ்தானில் மக்கள் அவதிப்படுவதற்காவது மத அடிப்படைவாதிகளைக் காரணம் சொல்லலாம். இலங்கைக்கு என்ன காரணம் பொருந்தும்? மதமா, இனமா? ஒன்றுமேயில்லை. ஆட்சியாளர்களின் அறிவீனம், தன்னலம் என்பதற்கு அப்பால் மிகச் சிறியதொரு காரணத்தைக் கூடச் சுட்டிவிட முடியாது.
பல்லாண்டு காலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் சிரியா யுத்தத்தின் காரணம் இன்றைக்கு அந்த யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் பல்வேறு தரப்புகளுக்கே மறந்திருக்கும். மரணம் பழகிய மக்கள் எதையும் பொருட்படுத்தவியலாத எல்லைக்குச் சென்றுவிடவே, யுத்தம் அன்றாடம் கடைக்குச் சென்று காய்கறி வாங்குவது போன்றதொரு செயலாகிப் போனது.
அந்தளவுக்கு நம் நாட்டில் அவலமில்லை என்பதை மட்டும் எண்ணி வேண்டுமானால் நிம்மதியடையலாம்.
இரண்டாண்டுக் காலம் கோரத்தாண்டவம் ஆடிவிட்டுச் சிறிது ஓய்வெடுக்கச் சென்றிருந்த கோவிட் தொற்று மீண்டும் ஓர் அலையாகப் பெருக ஆரம்பித்திருப்பதாக இந்த ஆண்டு முடியும் தருணத்தில் தகவல் வருகிறது. அதே சீனா. அதே கோவிட். ஆனால் வேறு ரகம். இன்னும் வீரியமானது என்கிறார்கள். நெருக்கடிகளும் இருப்பியல் சார்ந்த இன்னல்களும் தொடரத்தான் போகின்றன. இவ்வளவுக்கும் இடையில்தான் நாம் மதத்தை முன்வைத்து, கட்சிகளை முன்வைத்து, சாதிகளை முன்வைத்து அரசியல் பேசிக்கொண்டிருக்கிறோம். சிறிது நகர்ந்து நின்று எண்ணிப் பார்த்தால் நமக்கே சிரிப்பு வரும்.
எதிர்வரும் புத்தாண்டு எப்படி இருக்கும் என்று தோராயமாகக் கூட மதிப்பிட முடியாத சூழ்நிலையில், எப்போதும் போல நமது நம்பிக்கையை முதலீடாக்கி வென்று கடப்பது தவிர வேறு வழியில்லை.
புத்தாண்டு வாழ்த்துகள்.
சிறப்புப் பகுதி: அடைந்ததும் இழந்ததும்
வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...
நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...
அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...
கனடா பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதமராக இருந்த மார்க் கார்னியின் தலைமையில்...
திரும்பிப் பார் - சென்ற இதழ் தொடர்ச்சி
இங்கும் அங்கும்
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...
பாகிஸ்தான் குடிமக்களுக்கு, இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்பட்டன. மருத்துவ விசாக்களுக்கு ஏப்ரல் 29 வரை...
எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக்...
அண்மையில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு பிரதமர் மோடி தலைமையில் கூடி விவாதித்தது...
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் பணி மாறுதலுக்கும் தேசிய அளவில் அறியப்பட்டவர் ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா. முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சிப் பணியில்...
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
சந்திரனில் தரையிறங்கிய முதல் இந்திய செயற்கைக்கோள் சந்திரயான்-1. இந்தப் பயணத்திற்குப் பின்னணியில் செயல்பட்ட இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே...
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல் நடந்தவுடன் இந்தியப் பிரதமர் மோடியின் சவூதி சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டது. 23ஆம் தேதி காலையில் டெல்லியில்...
தொடரும்
சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...
ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...