Home » Home 21-12-2022

வணக்கம்

இந்த இதழ் நமது மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் - செய்தியாளர்களின் ஆண்டறிக்கைச் சிறப்பிதழாகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இவர்களில் யாருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது. இப்போது வரையிலுமே பலர் நேரில் சந்தித்திராதவர்கள். வேறு வேறு தேசங்களில், வேறு வேறு தொழில்களில், வேறு வேறு வாழ்க்கை முறைகளில் இருப்பவர்கள். எழுத்தார்வமே இவர்களை ஒருங்கிணைத்தது. எழுத்து வகுப்புகளில் அறிமுகமாகி, எழுதத் தேர்ந்த பின்பு மெட்ராஸ் பேப்பருக்கு வந்தவர்கள். இந்த வருடம் தமது முதல் புத்தகத்தையும் எழுதி முடித்தவர்கள்.

வானளாவிய கட்டடங்களே ஆனாலும் ஒவ்வொரு செங்கல்லாகத்தான் வைத்துக் கட்டியாக வேண்டும். அவ்விதத்தில் இந்த எழுத்தாளர்கள் இந்த ஆண்டு எடுத்து வைத்திருக்கும் முதல் கற்கள் இவை.

எப்போதாவது தோன்றும்போது எழுதுவது என்பது வேறு. எழுத்தை ஒரு தினசரிப் பயிற்சியாக, வாழ்க்கை முறையின் ஓர் அங்கமாக மாற்றிக்கொள்வது என்பது வேறு. இவர்கள் அனைவரும் விரும்பித் தம்மை எழுத்துக்கு ஒப்புக் கொடுத்தவர்கள். தனி வாழ்வின் கெடுபிடிகள், துயரங்கள் எவ்வளவு கனம் மிக்கதாயினும் அதை நகர்த்தி வைத்துவிட்டு எழுத்துப் பணிக்கு முக்கியத்துவம் தருபவர்கள்.

ஓர் உதாரணத்துக்கு ஸஃபார் அஹ்மத் எழுதியிருக்கும் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். சிங்களப் பேரினம் ஆளும் தேசத்தில் சிறுபான்மை இனத்தில் பிறந்துவிட்ட ஒரே காரணத்தால் பயங்கரவாதி என்று முத்திரையிட்டு, அவரை என்ன பாடு படுத்தியிருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். ரத்தக் கண்ணீர் வரச் செய்யும். ஆனால் இப்படியொரு இருப்பியல் நெருக்கடிக்கு இடையில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த சாயலே இல்லாமல் அவர் எழுதுகிற கட்டுரைகளை நினைவுகூர்ந்து பார்க்கலாம். எழுதுதல் என்னும் செயல்பாட்டுக்கு முழுமையாகத் தன்னை ஒப்புக்கொடுக்காத ஒருவருக்கு இது சாத்தியமேயில்லை.

கடந்து போகும் ஆண்டைத் திரும்பிப் பார்ப்பதென்பதை அனைவரும் செய்வார்கள். இந்த இதழில் நீங்கள் படிக்கவிருக்கும் கட்டுரைகள், அடுத்து வரும் ஆண்டை மேலும் ஆக்கபூர்வமாக அமைத்துக்கொள்ள மறைமுகமாகச் சில நுட்பங்களைக் கற்றுத் தரும்.

நிற்க. மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்களின் பதிமூன்று புத்தகங்களை ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனம் வெளியிடுவதை அறிவீர்கள். இதனை ஒரு வாசகர் திருவிழாவாகக் கொண்டாட விரும்புகிறோம். ஜனவரி 11, 2023 புதன்கிழமை மாலை ஐந்து மணிக்கு சென்னை கேகே நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் இச்சந்திப்பு நிகழும். இந்நிகழ்ச்சிக்கென நமது எழுத்தாளர்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் சென்னை வருகிறார்கள். வாசகர்கள் அனைவரையும் இந்நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைக்கிறோம். எழுத்தாளர்களை அங்கே நீங்கள் நேரில் சந்திக்கலாம். புத்தகங்களில் கையெழுத்து பெறலாம். புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். கேள்விகள் கேட்கலாம். விவாதிக்கலாம்.

இது மேடையில் இருப்பவர்கள் மட்டும் பேசும் நிகழ்ச்சியல்ல. வாசகர் பங்களிப்பே முதன்மையாக இருக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். வாருங்கள், சேர்ந்து கொண்டாடுவோம்.

சிறப்புப் பகுதி: திரும்பிப் பார்!

முன்னால் பார்!

நம் குரல்

போர்க்காலம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...

உலகம்

இருண்டு போன இரண்டு நாடுகள்

28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...

உலகம்

அமெரிக்காவின் கம்யூனிசத் தோழன்!

வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...

உலகம்

நைஜீரியா: ஒரு புதிய அடையாளப் புரட்சி

நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...

உலகம்

100 நாள் ஆட்சி: டிரம்ப் நாட் அவுட், நாடு நாக் அவுட்!

அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...

உலகம்

கனடா: கொண்டையில் ஒரு கூட்டணிப் பூ

கனடா பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதமராக இருந்த மார்க் கார்னியின் தலைமையில்...

தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 155

சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 16

16 புதியதோர் உலகம்   எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில்  தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

நீல வானம்

ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...

Read More
error: Content is protected !!