சமீபத்தில் என் ஐபோனின் சிம் கார்டை ‘இ-சிம்’மாக, அதாவது சிலிகான் அட்டையாக இல்லாமல் மென்பொருளாக மாற்ற ஒரு தொலைபேசி நிறுவனத்தின் கடைக்கு சென்றேன். என் ஆதார் அட்டை, ஆள்காட்டி விரல்ரேகை, புகைப்படம் என்று (பாஸ்போர்ட் புதுப்பிப்பில் கேட்கும் தகவல்களை போன்று) யாவற்றையும் விரிவாகக் கேட்டு இருபது நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டு செய்து முடித்தார்கள். நான் பொறுமையாகக் காத்திருந்தேன். வேலை முடிந்தவுடன் அந்த ஊழியரிடம் நன்றி கூறினேன். அவர் ஆச்சரியத்துடன், “பொதுவாக இந்த அளவுக்கு நாங்கள் கேள்வி கேட்பதற்கு எல்லோரும் கோபித்துக் கொள்வார்கள். நீங்கள் ஒருவர்தான் சிரித்துக் கொண்டு எல்லாவற்றுக்கும் பதில் கொடுத்தீர்கள்!” என்றார். ஏன் பொறுமையுடன் இருந்தேன் என்பதற்கான காரணத்தை இப்போது பார்க்கலாம்.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
இ சிம் பற்றி இதன் மூலமே அறிந்தேன்.அருமை.