Home » Home-15-06-22

வணக்கம்

இது உணவுச் சிறப்பிதழ். உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களில் தொடங்கி, உணவு பரிமாறும் கலை வரை ஏராளமான விஷயங்கள் இதில் பேசப்பட்டிருக்கின்றன.

இதனினும் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று உண்டு. இந்த இதழில் சமையல் குறிப்புகள் கிடையாது.

இலக்கியம், அரசியல், ஆன்மிகம், பொருளாதாரம் குறித்தெல்லாம் நேரம் மறந்து கூடிப் பேசுவோரை அறிந்திருப்பீர்கள். உணவும் அப்படிப்பட்ட ஓர் இயல்தான். என்ன பேசினாலும் அலுக்காது; எத்தனை விதமாகப் பேசினாலும் சலிக்காது.

ஆனால் தமிழ்ச் சூழலில் உணவைக் குறித்துப் பேசுவது என்றாலே சமையல் குறிப்புகளைச் சொல்வதுதான். இது இன்று நேற்று உருவான வழக்கமல்ல. தொன்று தொட்டே இப்படித்தான். இணையத்தில் தொட்டதற்கெல்லாம் ‘லிங்க் ப்ளீஸ்’ என்று கேட்பதை நிகர்த்தது இது. உண்மையில், சிறந்த சமையல் என்பது குறிப்புகளைப் புறந்தள்ளி உருவாவதே ஆகும். கலை மனமும் மேம்பட்ட ரசனையும் தீராத ஆர்வமும் ஒருங்கிணையும்போதே ருசி மிகுந்த ஓர் உணவு உருவாகிறது. பொருள்களல்ல. அவற்றைக் கையாள்வோரின் திறமையே ருசியின் ஆதாரம்.

இந்த இதழில் வழக்கமான தொடர் பகுதிகளைத் தவிர, உணவு சார்ந்த கட்டுரைகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஷாராஜின் சிறுகதையும் அது தொடர்பானதே. மொத்தமாகத் தொகுத்துப் படிக்கும் வாசகர்களுக்கு இது வசதியாக இருக்கும். உலகம் உண்ணும் விதத்தை ஒரு புத்தகத்தில் முழுமையாக வாசித்துத் தெரிந்துகொண்டாற் போன்ற அனுபவத்தைத் தர வேண்டும் என்று எண்ணியதால் இந்த ஏற்பாடு.

இதழ் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மெட்ராஸ் பேப்பர் மேலும் சிறப்பாக வெளிவர உங்கள் ஆலோசனைகள் மிகவும் முக்கியம்.

உலகம் எப்படி உண்கிறது?

அறுசுவை

ஆரோக்கியம்

நவீன நாசகார உணவுகள் – ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

பத்து வயது சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டம். சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பமே கூடியிருக்கிறது. வாழ்த்துக்களுடன் கேக் வெட்டி ஒருவருக்கொருவர்...

சிந்தனை செய்

வரலாறு முக்கியம்

  • தொடரும்

    aim தொடரும்

    AIM IT – 3

    அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறையின் முக்கிய அங்கம் இவர். அவருக்கொரு செல்வமகள். தன் தந்தை ரோனன் சொல்லும் கதைகளைக் கேட்டால் தான் அச்சிறுகுழந்தைக்குத் தூக்கம் வரும். வழமை போலவே...

    Read More
    G தொடரும்

    G இன்றி அமையாது உலகு – 3

    3. இருவர் ஒரே வருடத்தில் பிறந்திருந்தாலும், அந்த இருவருக்கும் பிறந்த தேசங்கள் வேறு. தாய்மொழி வேறு. வளர்க்கப்பட்ட விதம் வேறு. குணங்கள் வேறு. ஆனால் இருவருக்குள்ளும் சிறு வயதிலிருந்து கணினி மீதான ஆர்வமும், புலமையும், அதில் ஏதேனும் பெரிதாக சாதிக்கவேண்டும் என்ற வேட்கையும், என்ன செய்யப்போகிறோம் என்ற...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை – 3

    3. சம்பள ஆராய்ச்சி நமக்குப் பணத்தைக் கொண்டுவரும் குழாய்களை வருவாய் மூலங்கள் அல்லது வழிகள் (Income Sources/Channels) என்கிறார்கள். இதை நாம் எளிமையாகப் ‘பணவழிகள்’ என்று சொல்வோம். எடுத்துக்காட்டாக, ஒருவர் அலுவலகம் சென்று வேலை பார்த்துச் சம்பளம் பெறுகிறார், இன்னொருவர் கடை வைத்துப் பொருட்களை...

    Read More
    உரு தொடரும்

    உரு – 3

    பள்ளிக்கூடம் போகாமலே… முத்துவின் அம்மாவுக்குத் தையல் கடை வேலை, வீட்டு வேலை எல்லாம் போக வேறொரு சிறப்பு வேலை இருந்தது. பிள்ளைகளைத் தேடும் வேலை. முத்துவையும் அவர் தங்கையையும் அக்கம்பக்கத்தில் உள்ளோர் தூக்கிக் கொண்டுபோய் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இருவருமே கொஞ்சம் வெளிர்நிறத் தோலுடையவர்கள்...

    Read More
    ஆன்மிகம்

    வாழ வைக்கும் வசவுகள்

    பழனி அருகிலுள்ள கணக்கம்பட்டி அழுக்குமூட்டை சித்தர் மிகப்பிரபலம். தமிழகம் முழுவதிலுமிருந்து அவரைக்காண பக்தர்கள் வருவதுண்டு. வரும் பக்தர்களிடத்தில் அவர் எப்போதாவது உரையாடும் போது, எங்கிருந்து வருகிறாய்? என வினவுவாராம். சேலத்தில் இருந்து வருகிறேன் என்று சொன்னால், என் தம்பி ஒருத்தன் அங்கே...

    Read More
    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 98

    98 ஹீரோ ஓரிரு இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களில் தட்டுப்பட்ட, தன் புத்தக வெளியீட்டு விழாவில் பார்த்த முகத்தை பஸ்ஸில் பார்த்தது கொஞ்சம் பரபரப்பாக்கிவிட்டது. பெண்களை முன்பின் பார்க்காதவனோ பழகாதவனோ இல்லை என்றாலும் இந்தப் பெண் சற்றே வெட்கத்துடன் சிரித்ததைப்போலத் தோன்றியது வேறு  ஆர்வத்தைக் கூட்டிவிட்டது...

    Read More
    சாத்தானின் கடவுள் தொடரும்

    சாத்தானின் கடவுள் – 3

    3. இரு வேறு ஃபாரினர்ஸ் இன்னும் ஓர் இடமாற்றம். வேறொரு கிராமம். மற்றுமொரு பள்ளி. இப்போது நான் வளர்ந்த சிறுவன். நான்காம் வகுப்புக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். கேளம்பாக்கம் பஞ்சாயத்து ஒன்றியத் தொடக்கப்பள்ளி. இந்தத் தொடக்கப்பள்ளிக் கட்டடம் இருக்கும் அதே வளாகத்துக்குள்ளேயே அப்பா மாற்றலாகி வந்திருக்கும்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 102

    102. முதல் ஜானாதிபதி பிரதமர் நேருவுடன் அமெரிக்காவுக்கு யாரெல்லாம் செல்வது என்பது முடிவாயிற்று. உடல் பலகீனமாக இருந்தாலும், தந்தையோடு அமெரிக்கா செல்வதற்குத் தயாரானார் இந்திரா. ஆனால், தன்னைப் பழி வாங்க அமெரிக்காவில் இந்தியத் தூதர் பொறுப்பு வகிக்கும் அத்தை விஜயலட்சுமிபண்டிட் ஒரு திட்டம் போட்டு...

    Read More
    error: Content is protected !!