Home » முப்பது லட்சம் அகதிகள்
உலகம் போர்க்களம்

முப்பது லட்சம் அகதிகள்

அகதி முகாம்

உக்ரைன் மீது ரஷ்யா போர் அறிவிப்பு செய்த நாளிலிருந்து, இதுவரை முப்பது லட்சம் உக்ரைனியர்கள் போலந்துக்குள் அகதிகளாக நுழைந்திருக்கிறார்கள். இது மொத்த உக்ரைனிய அகதிகள் எண்ணிக்கையில் ஐம்பத்தைந்து சதவீதம். போலந்தின் மக்கள் தொகை 3.8 கோடிதான். அதில் 30 லட்சம் அகதிகள் என்பது கொஞ்சம் அதிகமான எண்ணிக்கையாகத் தெரிகிறது அல்லவா?

ஆனால் உக்ரைனியர்களுக்கும் வேறு வழியில்லை. போலந்தும் ஏற்காதிருக்க முடியாது. சரித்திர காலம் தொடங்கி இரு தேசங்களுக்கும் இடையில் உள்ள உறவு நிலை காரணம். புவியியல் ரீதியில் போலந்து மிக நெருங்கிய பக்கத்து வீடு என்பது அதி முக்கியக் காரணம்.

போர் தொடங்கிய நாளிலிருந்து தினமும் ஆயிரக் கணக்கான உக்ரைனியர்கள் போலந்தின் மெடிக்கா என்கிற எல்லைப்புற கிராமம் வழியாக இடம் பெயரத் தொடங்கினார்கள். மெடிக்காவிலேயே ஒரு ரயில் நிலையம் இருப்பதால், ரயிலேறி போலந்து முழுவதும் செல்ல அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் உக்ரைனை விட்டு வெளியேற அனுமதி இல்லாததால், பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக இடம் பெயர ஆரம்பித்தார்கள். அகதிகளாக வரும் மக்களை வரவேற்க மெடிக்கா தொடங்கி, நாட்டின் பல முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. தன்னார்வலர்கள் இராப்பகலாக வேலை செய்யத் தொடங்கினார்கள்.

உண்மையில், உக்ரைனியர்களுக்கு இப்படி ஒரு வரவேற்பு ம‌ற்ற ஐரோப்பிய நாடுகளில் கிடைக்குமா என்பது சந்தேகமே. வந்தவர்களுக்கு எந்த விசாரணைக்கும் முன்னதாக உணவு, சூப் போன்ற பானங்கள் வழங்கப்பட்டன. பற்பசை, பிரஷ், சோப்பு, சானிட்டரி நாப்கின்கள், குழந்தைகளுக்குத் தேவையான உணவுகள், பொம்மைகள் தொடங்கி மருந்துப் பொருள்கள் வரை அனைத்து அத்தியாவசியங்களும் தயாராக வைக்கப்பட்டிருந்தன. ஆரஞ்சு, லைக்கா போன்ற நிறுவனங்கள் இலவச சிம் கார்டுகளைக் கொடுத்தார்கள். தேவைப்பட்ட இடங்களுக்குச் செல்ல பேருந்து வசதிகள், டாக்ஸி என சகல வசதிகளும் இந்த முகாம்களிலேயே கிடைத்தது. ஆங்காங்கே வழிகாட்டு மையங்களும் அவர்களுக்காகவே நிறுவப்பட்டிருந்தன. எந்த உக்ரைனியரும் உதவி என்று யாரையும் போய்க் கேட்கத் தேவையில்லை. எல்லாம் கைக்கு வரும். போலந்தில் உள்ள நம் ஊர் குருத்வாராக்களும் இஸ்கான் அமைப்பினரும் கூட முகாம்களில் உதவி செய்து கொண்டிருந்ததைக் காண முடிந்தது…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!