Home » Archives for February 2025 » Page 7

இதழ் தொகுப்பு 3 months ago

இந்தியா

குஜராத் புல்டோசர்

ஒரு மாநிலத்தில் தொடர்ந்து ஏழுமுறை தேர்தலில் வென்று ஆட்சியில் இருப்பது சாதாரண விஷயமல்ல. பாரதிய ஜனதா கட்சி அதனைச் செய்து காட்டியிருக்கும் இடம் குஜராத். குஜராத் மாடல் என்ற ஒன்றை உருவாக்கி அதற்கு வளர்ச்சி எனப் பெயரிட்டுச் சீவி சிங்காரித்து அழகாக்கித் தேர்தலின்போது மக்களுக்காகக் காட்சிக்கு வைத்தது...

Read More
சண்டைக் களம் தொடரும்

சண்டைக்களம் – 13

4. புகழ்பெற்ற சண்டைக்கலைகள் i. கராத்தே பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜப்பானின் ஒக்கினோவா பகுதியில் ஆயுதங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் தங்களுடைய தற்காப்புக்காக சீனச் சண்டைக்கலையைத் தழுவியும் ஜப்பானிய நுட்பங்களைச் சேர்த்தும் வெறுங்கைகளினால் சண்டையிடும்...

Read More
தடயம் தொடரும்

தடயம் – 13

தொடர்புகளைத் துலக்கும் அறிவியல் பிரேமானந்தாவை நாம் மறந்திருக்க மாட்டோம். தமிழகத்தில் ஆசிரமம் நடத்திவந்தவர். வெகுவான பக்தர்களைக்கொண்டிருந்தவர். தொண்ணூறுகளின் முதற்பாதியில் அவரது வீழ்ச்சி தொடங்கியது. பல்வேறு பாலியல் வன்புணர்வுப் புகார்கள் அவர்மீது எழுந்தன. கொலைக்குற்றங்களும் அவற்றில் அடங்கும்...

Read More
சமூகம்

நோக்கம் சிறந்த நடைப்பயணம்

ஓட்டுக்குப் பணம் வாங்காமல் ‘நேர்மையாக வாக்களிப்போம்’ என்னும் பிரசாரத்தை முன் வைத்து கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் கோவையிலிருந்து வேதாரண்யம் வரை நடைப்பயணம் மேற்கொண்டனர். இவர்களில் இருவர் ஆண்கள். நான்கு பேர் பெண்கள். பதினெட்டு நாள்களில் நாநூறு கிலோமீட்டர்கள் நடைப்பயணம் செய்துள்ளார்கள்...

Read More
ஆன்மிகம்

மகா கும்பமேளா – பிரயாக்ராஜிலிருந்து நேரடி ரிப்போர்ட்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடந்துகொண்டிருக்கும் மகா கும்ப மேளாவுக்குத் தமது குழுவினருடன் சென்றிருக்கும் சுவாமி ஓம்கார், அங்கிருந்து மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்கு வழங்கும் நேரடி ரிப்போர்ட் இது. மனித குல வரலாற்றில் எங்கும் எக்காலத்திலும் இதற்கு நிகரான இன்னொரு ஒன்றுகூடல்...

Read More
உலகம்

கையெழுத்தும் தலையெழுத்தும்

ஒரு கையெழுத்து பல கோடி மக்களின் தலையெழுத்தை ஒரே வாரத்தில் புரட்டிப் போட்டிருக்கிறது. இப்படி நடக்கும் என்று தெரிந்தே, சிறிது கூட கவலையோ பரிதவிப்போ இல்லாமல் அதைச் செய்திருக்கிறார் அமெரிக்க அதிபர். சென்ற வருடத்தில் மட்டும் அமெரிக்கா, தன் பன்னாட்டு நிறுவனத்தின் (USAID) மூலம் $7.2 பில்லியன் பணத்தை...

Read More
அறிவியல்

அப்பாவுக்கும் அப்பாவுக்கும் பிறந்த பிள்ளை

அண்மையில், ஓர் எலி முதிர் பருவமடைந்ததைக் கண்டு அதிசயித்தது அறிவியல் உலகம். இதில் அதிசயிக்க என்ன இருக்கிறது? என்றால், அந்த எலி இரண்டு ஆண் எலிகளுக்குப் பிறந்தது. மூலச்செல் (Stem Cell) தொழில்நுட்பம் மற்றும் மரபணு உருப்பதிவுத் (Imprinted Genes) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதைச் சாதித்துள்ளது ஓர்...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 43

43. பிரித்தாளல் இன்றைய நிதிச் சந்தையில் நம்முடைய குறுகிய கால, இடைக்கால, நீண்ட கால நிதித் தேவைகளுக்கான முதலீடுகளைச் செய்வதற்குப் பலவிதமான வழிகள், வாய்ப்புகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் வெவ்வேறு நன்மைகள், தீமைகள் உண்டு. அதனால், சில வழிகள் சில குறிப்பிட்ட கால முதலீடுகளுக்குமட்டும்தான் பொருந்தும்...

Read More
தமிழர் உலகம்

தமிழ்ப் பையன் பிரான்ஸ் பொண்ணு

பிரான்கோபோனி என்பது,பிரெஞ்சு மொழி பேசும் ஆண்கள்- பெண்களைக் குறிக்கும் சொல். ஐந்து கண்டங்களையும் சேர்த்து 321 மில்லியன் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள் என்கிறது பிரான்கோபோனி அமைப்பு. 1970இல் தொடங்கப்பட்டது இவ்வமைப்பு. பிரெஞ்சைத் தாய் மொழியாகவும், வழக்கு மொழியாகவும் கொண்டிருக்கும் நாடுகள்...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

சிப்புக்குள் முத்து: எந்த மைக்ரோப்ராசசர் எனக்கு ஏற்றது?

“சிஸ்டம் ரொம்ப ஸ்லோவாயிருச்சு” என்ற சலிப்பில் தொடங்குகிறது புதுக் கம்ப்யூட்டர் வாங்கும் கதை. நல்ல கம்ப்யூட்டர் வாங்குவது எப்படி என்பது எவர் க்ரீன் கொஸ்டின். அக்கேள்விக்கான விடையில் பெரும்பங்கு வகிப்பவை மைக்ரோப்ராசஸர்கள். முதலில் என்ன செய்யவே கூடாது என்று பார்த்துவிடுவோம். ஜவுளிக்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!