கடந்த சில வருடங்களாகவே, சீதாராம் யெச்சூரியும் ராகுலும் அடிக்கடி இணைந்தே காணப்பட்டனர். ராகுல், அவரின் அறைக்குச் சென்று நெடுநேரம் பேசுவது, எப்போதும் உடனிருப்பது அவர்களது அன்றாடம் ஆனது. ஒரு கட்டத்தில் இரண்டு கட்சிகளுமே இது குறித்து முணுமுணுக்க ஆரம்பித்தன. ‘யெச்சூரிக்கு அவர் கட்சியில் கூட இத்தனை...
இதழ் தொகுப்பு 8 months ago
தமிழ்நாட்டை அறிவுசார் செயல்பாடுகளில் முன்னணியில் நிறுத்துவது அரசின் கனவாக இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுசார் நகரம் அமைப்பதில் தொடங்கி பள்ளிகளில் அறிவியல் ஆர்வம் உண்டாக்கும் வானவில் மன்றம் வரை பல திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. நல்லது. திட்டங்களைச் செயல்படுத்தும்போது அவை நீர்த்துப்...
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட அரங்கில் நடக்கிறது மதுரை புத்தகக் கண்காட்சி. எதிர்வரும் பதினாறாம் தேதிவரை நடைபெறுகிறது. நாள்தோறும் காலை 11 மணிமுதல் இரவு 9 மணிவரை அரங்கம் திறந்திருக்கும். மாலையில் இலக்கிய ஆர்வலர்களின் ரசனையைக் கருத்தில் கொண்டு பேச்சரங்கங்கள் நடைபெறுகின்றன...
வங்காளதேசத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது. ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துவிட்டார். இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக எது நடந்தாலும் அது இந்தியாவில் எதிரொலிக்கும். நல்லதோ கெட்டதோ அதிக எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தியாவுக்கு அது புரிகிறதோ இல்லையோ, சீனாவுக்குத் தெளிவாகப்...
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் பத்து நாள்களே இருக்கும் நிலையில் அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடந்து முடிந்துவிட்டது. இவ்வாக்கெடுப்பு நிலையங்களில் இருந்து வரும் செய்திகள், இது தொடர்பாய் வரும் சமூகவலைத்தளப் பதிவுகள் எதுவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சரி, எதிர்க்கட்சித் தலைவர்...
சட சடவென்று துப்பாக்கிச் சத்தம். மதில் சுவரில் வட்டமாக ஒரு பெரிய துளை, சுற்றிப் புகையும் கதறலும். அந்தத் துளையின் வெளியே வரும் ஒவ்வொருவருக்கும் காத்துக்கொண்டிருந்தது, துப்பாக்கிக் குண்டு. மொத்தம் 24பேர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் மட்டும் இறந்துள்ளனர். விடியற் காலையில் இந்தக் காட்சியைக் கண்ட...
2024ஆம் ஆண்டின் ஒலிம்பிக்ஸ் போட்டியின் தொடர்ச்சியாக பாராலிம்பிம்க் போட்டிகளும் நடந்தன. மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் இவை. இந்திய பாராலிம்பிக்ஸ் வீரர்கள் பல பதக்கங்கள் வென்றுள்ளனர். விளையாட்டை ரசிக்கும் இந்தியர்கள் இதனால் கூடுதல் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாரீஸ்...
121. ஹோ சி மின் முதல் சே குவாரா வரை 1960களின் ஆரம்பத்தில் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய ஆப்ரிக்க நாடுகள் ஒரு தளத்தில் ஒன்றிணைந்து 1963ல் ஆப்ரிக்க ஒற்றுமைக்கான அமைப்பினை உருவாக்கின. அந்த சந்தர்ப்பத்தில் புதிய அமைப்பினை வரவேற்கும் வகையில், “ஆப்ரிக்கா விழித்து எழுந்திருப்பது என்பது இருபதாம்...
விமலாதித்த மாமல்லன் சூப்பிரெண்டெண்டண்ட் வேல்முருகன் அறைக்குள் நுழைந்தபோது ‘ஹலோ ஹலோ’ என்று கத்திவிட்டு, ‘சனியன் பிடிச்ச ஏர்செல் எல்லா எடத்துலையும் நல்லா எடுக்குது. இந்த பில்டிங்ல மட்டும் வேலசெய்ய மாட்டேங்குது’ என்று சபித்தபடி, தோல் கைப்பையை எடுத்துக்கொண்டு இருக்கையிலிருந்து எழுந்தார் ஏசி டேவிட்...
22. செயற்கை நுண்ணறிவு ஆய்வுகள் செயற்கை நுண்ணறிவுதான் உலகை ஆளவிருக்கும் புதிய கடவுள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதில் கூகுளை சாட் ஜிபிடி (Chat GPT) சற்று முந்திச் சென்றுவிட்டது என்பதில் கூகுள் ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் சற்று ஏமாற்றம்தான். ஆனால் அது தாமதம்தானே ஒழிய, இன்னும் நிறைவாகச் சாதிக்க...