Home » Archives for September 2024 » Page 2

இதழ் தொகுப்பு 8 months ago

G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 24

24. நலம்சார் செயலிகள் கூகுள் ஹெல்த் (Google Health) எனப்படும் தனிமனித நலம் மற்றும் மருத்துவம் தொடர்பான செயலிகள் பற்றிய ஆய்வுத்துறை கூகுளில் 2008ல் உருவாக்கப்பட்டது. உடல் நலம், ஆரோக்கியம் சார்ந்த தகவல்களை நுட்பம் சார்ந்து மெருகேற்றுவது. அதைப் பொதுச் சமூகத்துக்கு உபயோகமான, நம்பகமான தகவல்களாக...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 24

24. ஒளியிலே தெரிவது  வள்ளலார் 1823 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரது தாயார், அவரது தந்தைக்கு ஆறாவது மனைவி. முதல் ஐந்து பேரும் பிரசவ காலத்தில் இறந்திருக்கிறார்கள். அந்தக் கணக்கை நேர் செய்வது போல, ஆறாவதாக மணந்த பெண்ணுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்திருக்கின்றன. வள்ளலார், ஐந்தாவது. குழந்தை பிறந்த ஐந்தாம் மாதம்...

Read More
வேலை வாய்ப்பு

கூகுள் வேலை குதிரைக் கொம்பா?

கடந்த வாரம் ஒரு பீகார் பெண்ணுக்குக் கூகுளில் 60 லட்சம் சம்பளத்துடன் வேலை என்ற தலைப்புச் செய்தியுடன் சமூக வலைத்தளங்களின் ரீல்களும், மீம்களும் பறந்தன. செய்தி பற்றிக்கொண்டது அது பீகார் பெண் என்பதாலா? சராசரி இந்திய வருமானத்துக்கும் மிக அதிகமான அறுபது லட்சம் என்ற எண்ணாலா? கூகுள் நிறுவனத்தில் வேலை...

Read More
இந்தியா

கெஜ்ரிவாலின் ஓபிஎஸ்

அதிஷி மர்லேனா. டெல்லியின் புதிய முதல்வர். தான் பதவி விலகுவதாக முடிவு செய்யப்பட்டவுடன் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிஷாவின் பெயரை அடுத்த முதல்வராக முன்மொழிந்தார் அர்விந்த் கெஜ்ரிவால். பாஜகவின் சுஷ்மா சுவராஜ், காங்கிரசின் ஷீலா தீக்ஷித் வரிசையில் டெல்லி முதல்வர் பதவியில் அமரப் போகும்...

Read More
உலகம்

Aiமெரிக்கா!

செயற்கை நுண்ணறிவு மனிதர்களிடையே பிரிவினையை ஆழமாக்கக் கூடும். செயற்கை நுண்ணறிவு எத்தனையோ நல்ல முன்னேற்றங்களை மனித வாழ்வில் கொண்டு வர உள்ளது. அதற்கு மாறாகப் பல பாதகங்களையும் ஏற்படுத்தவல்லது. இப்போதெல்லாம் எந்தக் கலந்துரையாடல் நடந்தாலும் செயற்கை நுண்ணறிவு எப்படி இதில் பயன்படப்போகிறது என்ற பேச்சைத்...

Read More
இந்தியா

‘இந்தியாவை நம்பி இஸ்ரேலுக்குச் சென்றோம்!’

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு கட்டடத் தொழிலாளர்கள் பணியாற்றச் சென்ற செய்தி நாம் அறிந்ததே. எதற்காகச் சென்றார்களோ அந்த வேலையைச் செய்யாமல் பளு தூக்குதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட சம்பந்தம் இல்லாத பணிகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்ற முணுமுணுப்பு கிளம்பியுள்ளது. அதைத் தவிர சுமார்...

Read More
உலகம்

அதிபரான தோழர்

கடைசியில் அது நடந்துவிட்டது. நாம் இரண்டு வருடங்களுக்கு முன்பே கணித்தது போல ஜே.வி.பி தலைவரும், தேசிய மக்கள் கூட்டணியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தேர்வாகி இருக்கிறார். எந்தவித பிரபுத்துவப் பின்னணியுமில்லாத ஒரு பிசிக்ஸ் பட்டதாரி இலங்கையின் அதியுயர் பதவிக்குத்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 119

119 வாந்தி ‘தேவடியாப் பையா!’ என்றார் சுப்ரமண்ய ராஜு, மாரீஸ் பாரில் கதவை அடுத்து சுவரையொட்டிப் போடப்பட்டிருந்த நீளவாக்கிலிருந்த சோஃபாவில் அமர்ந்து கைகளை நீட்டிப் போட்டுக்கொண்டபடி. கையில் பேண்டு மாஸ்டர் பிளண்டு விஸ்கி கிளாஸுடன் அருகில் இவன் அமர்ந்திருந்தான். இவன் கிளாஸில் இருந்த ஸ்மாலில் பாதியைக்...

Read More
உணவு

13 சுற்று உணவு

ஒரே நேர்க்கோட்டில் ஐந்து கோள்கள் வரிசைகட்டும் என்கிற நாசாவின் அறிவிப்பு கூட அவ்வப்போது வரும். ஆனால் எங்கள் வீட்டில் மூவரின் விடுமுறை நாள்களும் ஒன்றாக அமைவது அரிதினும் அரிது. அப்படி அரிதாகக் கிடைத்த விடுமுறையை இந்த வருடம் பாரீஸில் கொண்டாடினோம். திகட்டத் திகட்ட பிரெஞ்சுப் புரட்சியையும்...

Read More
உரு தொடரும்

உரு – 24

24 யாதும் மொழியே யாவரும் கேளிர் வட இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட முத்து, ஒரு கோயிலுக்குச் சென்றார். பழங்காலக் கோயில்களில் ஏதேனும் கல்வெட்டுகள் இருப்பின் அவற்றில் இருக்கும் எழுத்துகளை ஆராய்வது அவருக்கு விருப்பமான ஒன்று. அவர் சென்றிருந்த கோயில், நன்றாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. எனவே தன்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!