தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என வளர்ந்துவரும் துறைகளின் பட்டியலில் சத்தமேயில்லாமல் சேர்ந்திருக்கிறது பெட் கேர் இண்டஸ்ட்ரி. அதாவது செல்லப் பிராணிகளின் பராமரிப்பிற்கான தயாரிப்புகளைக் கொண்டுதரும் நிறுவனங்கள். அதிகரித்து வரும் நாய் வளர்ப்பு இதற்கொரு முக்கியக் காரணம். அதிகமில்லை… இப்போது...
இதழ் தொகுப்பு May 2023
51 வாழ்வும் ஆரம்ப வரிகளும் ‘மாயவரம் ஜங்ஷனில் இறங்கிச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பியபோது, வண்டியில் மூன்றாவது ஆத்மா ஒன்று என் தோல் பையையும் துணிப் பையையும் நடுவே நகர்த்தி, என் இடத்தில் உட்கார்ந்து பூரி உருளைக்கிழங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தது’னு அக்பர் சாஸ்திரிய ஆரம்பிப்பார் ஜானகிராமன்...
முதல் உலகப் போர் முடிவடைந்து, மேற்கு நாடுகளனைத்தும் போரின் தாக்கத்தில் இருந்து மீளப் பாடுபட்டுக்கொண்டிருந்த சமயம். 1922ம் ஆண்டு சில அமெரிக்க எழுத்தாளர்கள் ஒன்று கூடினார்கள். (வில்லா கேதர், யூஜின் ஓ’நீல், ராபர்ட் ஃப்ரோஸ்ட், எலன் கிளாஸ்கோ, எட்வின் ஆர்லிங்டன் ராபின்சன், ராபர்ட் பெஞ்ச்லி.) சும்மா...
உலகம் செயலி மயமாகிவிட்டது. தொட்டதற்கெல்லாம் செயலிகள். செயலியின்றிச் செயலில்லை. ஆனால் கணக்குப் போட்டுப் பார்த்தீர்கள் என்றால் ஒரு சில நூறு செயலிகளைத்தான் மொத்த உலகமும் திரும்பத் திரும்பப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. உண்மையில் பல லட்சக்கணக்கான செயலிகள் அண்ட வெளியெங்கும் நிறைந்திருக்கின்றன. நாம்...
96 போன்ற திரைப்படங்களைப் பார்த்து ரசிக்கிறோம். உண்மையில், பள்ளி மாணவர்களுக்கு வருகிற காதல், அவர்களது எதிர்காலத்தைக் கபளீகரம் செய்துவிடும் அபாயம் அதிகம். நமது இலங்கைச் செய்தியாளர் ரும்மான் ஒரு பள்ளி ஆசிரியை. அதுவல்ல சிறப்பு. மாணவர்களின் காதலை வலிக்காமல் சஸ்பெண்ட் செய்து வைக்கும் கலையில் அவர் வல்லவர்...
ஜல்லிக்கட்டுப் போராட்டம் – அன்றைய சூழலில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதா? உண்மையில் தமிழனின் கலாசார அடையாளத்தை மீட்டெடுக்க உருவெடுத்தது. ஊழல், விவசாயம், சுற்றுச்சூழல், இன்னபிற அதிருப்திகள் இருந்தபோதும் அமைதிகாத்த தமிழகம், தம் அடையாளத்தை அழிக்க முற்பட்டவுடன் வெகுண்டெழுந்தது அல்லவா...
“யோக்கியனுக்கு இருட்டுல என்னடா வேல?” என்றொரு வடிவேலு பட வசனம். நாமனைவருமே பார்த்து ரசித்திருப்போம். அதற்கு இணையானது தான், “நல்லவனுக்கு எதுக்குடா இன்காக்னிட்டோ மோட்?”. இன்காக்னிட்டோ என்பது வெப் பிரவுசர்கள் வழங்கும் ஒரு வசதி. இரகசியமாய்… இரகசியமாய்… இணையத்தைப் பயன்படுத்தும் வழி முறை. அல்லது...
கடின உழைப்பாளி நிறைய எதிர்பார்ப்புகளோடு இரண்டரை மணி நேரத்துக்கும் மேலான நீண்ட பேருந்துப் பயணம் செய்தார் ஒரு இளைஞர். போன இடத்தில் மற்றவர்களைப் பார்த்தால் கோட்டும் சூட்டும் டையுமாக இருக்கிறார்கள். பயணத்தினால் வந்த களைப்புடன் ஜீன்ஸ் அணிந்து வந்திருக்கும் தன் கோலத்தைப் பார்க்க அவருக்கே கஷ்டமாக இருந்தது...
தலைக்குள் ஒரு மஞ்சள் ஸ்ட்ராவைப் போட்டு, ‘க்ளக் க்ளக்’கென சூரியன் உறிஞ்சுவதைப் போன்று ஒரு விளம்பரத்தில் வரும். இப்பொழுது அடிக்கும் வெயில் அப்படித்தான் இருக்கிறது. வீட்டிற்குள் இருந்தால்கூடப் புழுங்கி எடுத்து சக்கையாய்ப் பிழிந்து போடுகிறது. அக்னி நட்சத்திரத்தின் ஆரம்பத்தில் கண்துடைப்புக்காகக்...
அவர் யார் என்று தெரியாது. அவரது பெயர் தெரியாது. அவரது மொழி தெரியாது. அம்முதிய பெண்மணி தரையில் அமர்ந்து ஒரு கல்லைத் தொட்டுக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். அக்காட்சியைப் பார்த்த எங்களால் அவரைக் கடந்து செல்ல முடியவில்லை. அம்முதியவர் அமர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த இடம் துபாய் எக்ஸ்போ...