அவர் யார் என்று தெரியாது. அவரது பெயர் தெரியாது. அவரது மொழி தெரியாது. அம்முதிய பெண்மணி தரையில் அமர்ந்து ஒரு கல்லைத் தொட்டுக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். அக்காட்சியைப் பார்த்த எங்களால் அவரைக் கடந்து செல்ல முடியவில்லை. அம்முதியவர் அமர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த இடம் துபாய் எக்ஸ்போ...
இதழ் தொகுப்பு May 24, 2023
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூபாய் நோட்டில் வைத்த சிப்ஸ் நமுத்துப் போனதால் திரும்பப் பெறப்படவில்லை என்றும் சேர்த்தே அறிவித்திருக்கலாம் ரிசர்வ் வங்கி. பொதுமக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கொடுப்பதை நிறுத்துமாறு வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன...
ட்விட்டரைச் சர்ச்சைக்குரியதாகவும் பரபரப்பாகவும் வைத்திருப்பவர் எலான் மஸ்க். இவர் தற்போது ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாகியை நியமித்திருக்கிறார். இத்தளத்தை மாற்றி அமைக்க லிண்டா யாக்கரினோவுடன் இணைந்து பணியாற்ற ஆவலோடு இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார் எலான் மஸ்க். அவர் கடந்த ஆண்டு...
அன்றைய தினம் பொழுது விடிந்ததிலிருந்தே ‘ருத்ரன்’ படத்தை நாலு தடவை பார்த்துத் தொலைத்தவள் போல வெறுப்பாக எரிந்து விழுந்து கொண்டிருந்தாள் இகவின் மனைவி. மனைவியானவளின் எரிச்சல் வசவுகளைத் தாங்கி ஓரளவு ‘எரிச்சல் ப்ரூஃப்’ ஆகவே இக இருந்தான் என்றாலும் இன்றைய எரிச்சலின் காரணத்தை அவனால் யூகிக்கவே முடியவில்லை...
26. பண்டிதமணி கதிரேசன் செட்டியார் (16.09.1881 – 24.10.1953) தமிழினம் என்பதற்கு உலகம் அறிந்த ஒரு உரைகல் வாக்கியம் உண்டு. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பதுதான் அது. உலகம் முழுக்கப் புகழ்பெற்ற அந்த வாக்கியத்தின் பொருள், எந்த ஊரும் எந்தன் ஊரே, உலகத்தில் வாழும் எந்த ஒரு மானுடரும்...
நாட்டின் அனைத்து ஆண்களும், பெண்களும் அங்கீகரிக்கப்பட்ட 28 சிகை அலங்காரங்களில் ஒன்றைத் தவிர வேறொன்றை கிராஃபிக்ஸில்கூட நினைத்தும் பார்க்கக்கூடாது, மைக்ரோவேவ் அடுப்பைப் பயன்படுத்தினால் சிறைத்தண்டனை. சொந்ததேச இசை தவிர வேறொன்றைக் கேட்டால் மரண தண்டனை. அரசாங்க அலுவலகத்தில் தூங்கினால் தூக்குத் தண்டனை, ஒரு...
மீல்ஸ், இட்லி, தோசை. இங்கிருக்கும் பெரும்பாலான ஹோட்டல்களின் மெயின் டிஷ் இவைதாம். இதற்கான முக்கிய மூலப்பொருள் அரிசி. ஆனால் அரிசியே உபயோகிக்காமல் ஒரு உணவகம் நடத்தப்படுகிறது- சென்னை, அம்பத்தூரில். இதைத் தொடங்கியவர் அமெரிக்காவிலிருக்கும் ஒரு தமிழ் மருத்துவர். டாக்டர் பாரதி ஒரு எண்டோகிரைனாலஜிஸ்ட்...
துருக்கி அதிபர் ரஜப் தையிப் எர்டோகனுக்கு சங்கு சத்தம் கேட்டுக் கொண்டிருப்பதாகவே மே 14-ம் தேதி நடந்த அதிபர் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை சர்வதேச மீடியாக்கள், அரசியல் விற்பன்னர்கள் முதல் ஊர்பேர் தெரியாத யூடியுப் அறிஞர்கள் வரை கதறினார்கள். ஆனால் அத்தனை ஆருடங்களையும்...
இறப்பினைத் தள்ளிப் போட முடியுமா? இறப்பினைக் கண்டு அஞ்சாதவர் இந்த உலகில் இருக்க முடியாது. ஒரு சில பேர் இருக்கக்கூடும். ஆனால் பெரும்பாலானோர்க்கு இறக்கும் நாள் தெரிந்துவிட்டால் வாழ்க்கை நரகம்தான். அனைவரையும் ஆட்டிப் படைக்கக்கூடிய இறப்பினைத் தள்ளிப் போட முடியுமா? ஒரு நாள், இரு நாள் இல்லை… பல...
52. கல்கத்தா மாநாடு ஜவஹர்லால் நேரு, அத்தனை துடிப்புடன் செயல்பட்டதற்கு என்ன காரணம்? சைமன் கமிஷனுக்கு நாடெங்கும் ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பு, ஜவஹர்லால் நேருவுக்கு மக்கள் மனதில் எழுந்துள்ள சுதந்திர உணர்ச்சியை எடுத்துக் காட்டியது. அறிவுஜீவிகள் தொடங்கி, இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்துத்...