Home » xAI : எலான் மஸ்க்கின் புதிய புரட்சி
அறிவியல்-தொழில்நுட்பம்

xAI : எலான் மஸ்க்கின் புதிய புரட்சி

சமீப நாள்களில் எலான் மஸ்க் என்ற பெயரைக் கேட்டவுடனே நமட்டுச் சிரிப்புடன் சிலரும், ஏளனச் சிரிப்புடன் பலரும் கடந்து செல்வதைப் பார்க்கிறோம். மிகக்குறிப்பாக அவர் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி அதனைத் தன் விரல் நுனிகளால் ஆட்டிவைத்து நாளொரு விதியும், பொழுதொரு வீண் கீச்சுக்களுமாய்ப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகுதான் இந்த விளைவுகளெல்லாம்.

ஆனால் எலான் மஸ்க்கின் ஆளுமை அவரின் டிவீட்களோடு மட்டுமே ஒப்பிட்டு எடைபோட முடியாத உயரமிக்கது. உலகின் மிக மரியாதைக்குரிய நிறுவனங்களாகக் கருதப்படும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூரோலிங்க் முதலிய தொழில்நுட்ப, செயற்கை நுண்ணறிவு சார்ந்த வாகனத் தயாரிப்பு உள்ளிட்ட மிக முக்கிய நுட்பங்களின் மூளையையும், செயல்பாட்டையும் நிர்வாகிக்கும் திறன்மிக்க நிர்வாகி என்பதுதான் அவரின் உண்மையான முகம்.

இந்த வரிசையில் இந்த வாரம் அவர் உலகின் கவனத்தை ஈர்த்த மிக முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டிருக்கிறார். xAI என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவின் மற்றொரு பரிமாணத்தை வெளிக்கொண்டுவரும் புதிய நிறுவனத்தையும் அதன் திட்ட வரைவொன்றையும் வெளியிட்டிருக்கிறார். ”பிரபஞ்சத்தின் உண்மையான நோக்கத்தை அறிந்துகொள்ளப் போகிறோம்” என்ற தாரக வாக்கியத்தோடு தனது புதிய திட்டத்தை அறிவித்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!