Home » வேப்பிங் அபாயம்: மாணவர்கள் ஜாக்கிரதை
சமூகம்

வேப்பிங் அபாயம்: மாணவர்கள் ஜாக்கிரதை

துபாய் வேப்பிங் எக்ஸ்போ

“அம்மா, இன்னைக்கு எங்க ஸ்கூல்ல பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் வேப்பிங் பண்ணதா கம்பளைண்ட் வந்து இருக்கு” என்றாள் மகள்.

‘அப்படின்னா?’ சட்டென்று கேட்க தைரியம் இல்லை. நாம் ஒன்று கேட்க மகள் எதிர்பார்க்காத அளவில் பெரிதாக எதையாவது சொல்லிவிட்டால்? அந்தத் தயக்கம்தான் காரணம்.

பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் அன்று நடந்த அனைத்தையும் அம்மாவிடம் ஒன்று விடாமல் சொல்வார்கள். பெண் குழந்தைகள் என்றால் கேட்கவே வேண்டாம். நம் காதைத் தனியாகக் கழட்டி அவர்கள் கையில் கொடுத்திட வேண்டியதுதான் பாக்கி. அவர்கள் வளர வளர, நாம் அறியாத பலவற்றை அவர்களுடைய பார்வை மற்றும் கவனத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டி வரும்.

அப்படித் தான் பள்ளி முடிந்து வீடு வரும் வழியில் அந்தத் தகவலைச் சொன்னாள் மகள்.

‘வேப்பிங்’ என்றால் என்ன? கண்டிப்பாக அது ஒரு கெட்ட சமாசாரம்தான் என்றது புத்தி. ஏதோ அதிர்ச்சி தரும் விஷயம். மேற்கொண்டு அவளிடமே கேட்பதா அல்லது வேறு யாரையாவது கேட்டு அறிவதா?

இருக்கவே இருக்கிறது கூகுள் என்று இரவு அதில் தேடப் போக, நமது கெட்ட நேரம், போட்ட ஸ்பெல்லிங் தப்பு. முதலெழுத்தை மாற்றிப் போட்டதில் வந்த விளக்கம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கலவரமூட்டியது. பிறகு முதலெழுத்தை V ஆக்கிப் பார்த்தபோது இன்னொரு பொருள் வந்தது…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • இ- சிகரெட்டா….தலை சுற்றுகிறது.
    இந்த கட்டுரை மூலம் தான் வேப்பிங் என்றால் என்னவென்று அறிகிறேன்.தேவையான விழிப்புணர்வு கட்டுரை.வருங்கால மாணவ செல்வங்களுக்கு இது போன்ற இன்னும் என்னன்ன அபாயங்களை எல்லாம் தாண்டனுமோ தெரியவில்லை.கெத்து காட்டத்தான் எல்லோரும் விரும்புகிறார்களே..
    பள்ளிகளில் பெற்றோர்களுக்கு இது குறித்து அறிவுறுத்தலாம்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!