Home » வான் – 17
தொடரும் வான்

வான் – 17

சீட்டுக் கட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்துவிட்டு,அதில் ஒன்றை லேசாகத் தட்டி விட்டால், அடுத்தடுத்து மொத்தமாக எல்லாம் சாய்ந்து விடும் இல்லையா.? இந்த ‘டாமினோ’ விளைவு உலக அரங்கிலும் நிகழ்ந்துவிடக் கூடாதென்று அமெரிக்காவுக்கு எப்போதுமே உள்ளூரப் பயம் இருந்தது. ஓரளவு முன்னேறி வரும் நாடுகளில் ஒன்று கம்யூனிசத்தைத் தழுவிக் கொண்டால், அடுத்தடுத்து அதுபோன்ற நாடுகளும், வரிசையாகக் கம்யூனிசம் பக்கம் போய் விடும் பயங்கர டாமினோ விளைவைத் தடுப்பதற்காக, அமெரிக்கா தன்னால் முடியுமான வரை அவை சம்பந்தப்பட்ட யுத்தங்களுக்கு அனுசரணை வழங்கியது.

வியட்னாம் போரில் அமெரிக்கா புகுந்து கொண்டதும், வடகொரியா தென் கொரியாவை ஆக்கிரமித்த போது தெற்கு வாசலில் கை கோர்த்துக் கொண்டதும், அதனைத் தொடர்ந்து உலகில் ஆங்காங்கே நிகழ்ந்த எத்தனையோ போர்களில் தனது படைகளை இறக்கியதும் இதற்காகத்தான் என்கின்றனர் சில வரலாற்று விமரிசகர்கள். இந்த ஒவ்வொரு நிகழ்விலும், மறு முனையில் சோவியத் நின்றது.

இரண்டாம் உலகப் போரில் கூட்டு வெற்றி. அதனோடு ஆரம்பமான அதிகார இழுபறி. உலகத் திரையரங்கில், இந்த இரண்டு வல்லரசுகளும் நேரடியாக மோதிக் கொண்ட திரைப்படங்கள் எதுவுமே ஓடவில்லை. பார்த்த பார்வைக்கு, இவர்களிடையே சர்வமும் அமைதி மயமாகத்தான் தோன்றியது. ஆனால் பூமியின் ஆப்கானிஸ்தானிலாகட்டும், விண்வெளியின் லியோ மண்டலத்திலாகட்டும்,சமயம் வரும்போதெல்லாம் யுத்தத் துகள்களைத் தூவிக் கொண்டே இருந்தன இரு தேசங்களும். நீருக்கடியில் நெருப்புக் கொண்டு போகும் இந்த விளையாட்டைத்தான், ‘பனிப்போர்’ என்று கௌரவமாகச் சொல்கிறோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!