Home » உயிருக்கு நேர் – 38
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 38

38  கி.ஆ.பெ.விசுவநாதம் (10.11.1899 – 19.12.1994)

முத்தமிழான இயல், இசை, நாடகம் என்று மூன்று தமிழின் காதலர் இவர். பின்னாட்களில் மூன்று தமிழுக்கும் காவலர் என்ற பெயரில் ‘முத்தமிழ்க்காவலர்’ என்ற புகழ்ப்பெயரை அடைந்தவர். தொழிலால் வணிகர்; ஆனால் அவரது பெயர் வரலாற்றில் நிலைத்தது அவரது பொதுப் பணிகளுக்காகவும், தமிழ்ப் பணிகளுக்காகவும். அவர் பிறந்த தமிழ்நாட்டின் திருச்சி நகரில், மருத்துவக் கல்லூரி அமையப்பெற்றுத் திறக்கப்பட்ட போது அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி, அந்தக் கல்லூரிக்கு இவரது பெயரைத்தான் சூட்டினார். காரணம் அறிந்தால் வியப்படைவோம். தமிழறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், முற்போக்குச் சமூக சிந்தனையாளர், அரசியலர், பத்திரிகையாளர், சைவ சித்தாந்த வித்தகர், தமிழ்ப் போராளி, ஏற்றுமதி வணிகர், சித்தமருத்துவ ஆர்வலர் என்று அவருக்கிருந்த வாழ்வியல் ஈடுபாடுகள் பலவிதமானவை. அவை அனைத்திலும் அவர் முத்திரை பதித்தவர் என்பதுதான் சிறப்பு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!