Home » உயிருக்கு நேர் -4
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -4

குலாம் காதிறு நாவலர்

குலாம் காதிறு நாவலர் ( 1833 – 1908)

 

தமிழ்த்தாத்தா என்று அறியப்பட்ட தமிழறிஞர் உ.வே.சாமிநாதய்யர். அவரது புகழ் பெற்ற ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. அவரது தமிழ்த்தொண்டையும் இந்தத் தொடரில் முதலில் நாம் கண்டுள்ளோம்.  தமிழுலகம் கண்ட இன்னொரு மாமேதையான தமிழறிஞர் மறைமலையடிகள். இந்த மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களை ஆசிரியராகவும், இந்த மறைமலையடிகளை மாணவராகவும் பெற்ற பெருமையுடைய தமிழறிஞர் ஒருவர் இருந்தார். அவர் நான்காம் நக்கீரர் என்றும் புகழப்பட்டவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரும்புகழ்பெற்ற தமிறிஞர்களுள் ஒருவர். மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட பாண்டித்துரைத் தேவரின் நண்பரும், அவர் நிறுவிய மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் முதன்மைப் புலவராகவும் இருந்து அலங்கரித்தவர் அந்தத் தமிழறிஞர். பன்னாடுகளுக்குச் சென்று தமிழ்ப்பணி ஆற்றியவர். மிக முன்னோடியாக மலேசியாவின் பினாங்கு நகரத்தில் இருந்து ஒரு தமிழ்ப்பத்திரிகையைக் கொண்டு வந்தவர். இலங்கையின் அறிஞர் பெருமக்கள் தமிழறிஞர் ஆறுமுகநாவலரைத் தவிர இன்னொருவரை நாவலர் என்று விளித்திருப்பது இல்லை; அத்தகு ஈழத்தில் தனது நூலை அரங்கேற்றிய திறன் கண்டு மகிழ்ந்த ஈழத்துத் தமிழறிஞர்கள் மனமுவந்து அந்தத் தமிழறிஞருக்கு நாவலர் என்ற பட்டமளித்துச் சிறப்பித்தார்கள். அவர், குலாம் காதிறு நாவலர். சிறந்த உரைநடை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர், பேச்சாளர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!