Home » உயிருக்கு நேர் -15
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -15

பாரதியார் - செல்லம்மா

 15  – மகாகவி பாரதி (11.12.1882 – 11.09.1921)

 அறிமுகம்

தமிழ்ச் சமூகம் கண்ட கவிஞர்களில் மாபெரும் புகழ் பெற்றவர்கள் என்று கணக்கிலெடுத்தால் இருவரைச் சொல்லலாம். ஒருவரைக் கவிச்சக்கரவர்த்தி என்று தமிழுலகம் போற்றுகிறது. இன்னொருவருக்கு மகாகவி என்ற சிறப்பைத் தமிழுலகம் அளித்தது. இத்தனைக்கும் இந்த இரண்டு பேருக்கும் இடையில் காலத்தால் கிட்டத்தட்ட 900 ஆண்டுகள் வேறுபாடு உண்டு. ஆனாலும் இந்த இரண்டு கவிஞர்களும் தமிழர்கள் மனதை ஒரே நோக்கில் கொள்ளை கொண்டார்கள். முதலாமர் கம்பர். அவர் ஒரே ஒரு காப்பியத்தை எடுத்துக் கொண்டு அதை மறு ஆக்கம் செய்தார். ஆனால் மறு ஆக்கம் மூலநூலை விடவும் பலமடங்கு புகழெய்தியது. மகாகவிகளின் கைப்பக்குவம் அதுதான். அடுத்தவர் சமீபகாலத்தில் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவர். வாழ்ந்த காலமும் கொஞ்சமே. 39 வயதுக்குள் மறைந்து போனார். இதில் அவரது குழந்தைப் பருவம் நீங்கலாக, அவர் பொது மக்களுக்குப் பரிச்சயமான வெளியில் இருந்தது இன்னும் குறைந்த காலமே இருக்கும். ஆனாலும் அவர் மறைந்து நூறாண்டு நெருங்கப் போகும் இந்த நேரத்திலும் அவரது கவிதைகள் உணர்ச்சிக் கனலைக் கொட்ட வல்லவை. படிப்போர்க்கு, படிக்குந்தோறும் உளப்பூரிப்பை ஏற்படுத்த வல்லவை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!