Home » திறக்க முடியாத கோட்டை – 19
திறக்க முடியாத கோட்டை தொடரும்

திறக்க முடியாத கோட்டை – 19

19. ஆறு மாதம் பொறுத்துக் கொள்ளுங்கள்

சோவியத் யூனியன் பிரிந்தது, அமெரிக்காவிற்கு நிச்சயம் நிம்மதியைக் கொடுத்திருக்கும். ஏன்… கொண்டாடுமளவு சந்தோஷத்தைக்கூட அளித்திருக்கும். நேட்டோ என்ற பெயரில், பிரிந்த சோவியத் நாடுகளைத் தன்பக்கம் சேர்க்கும் வேலைகள், வெற்றியில் மட்டுமே முடிந்தது. அதோடு மட்டுமா? ஒரு காலத்தில் வல்லரசாக இருந்த சோவியத், ரஷ்யா என்றானபின்பு படும்பாடு, உலகையே பரிதாபப்பட வைத்தது.

அக்டோபர் 23, 1995

நியூ யார்க் போஸ்னியா மற்றும் ஹெட்சகோவினா போரைக் குறித்து, அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனும், ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ஸினும் விவாதித்து முடித்திருந்தனர். போரை நிறுத்த நேட்டோப் படைகளின் உபயோகிப்பு குறித்து இணக்கமான முடிவிற்கே வந்திருந்தனர். பிறகு செய்தியாளர் சந்திப்பு.

“மிகுந்த நம்பிக்கையை இந்தச் சந்திப்பு எனக்கு அளித்திருக்கிறது. நீங்கள் எல்லோரும் போஸ்னியா குறித்த எங்கள் விவாதம் பேரழிவை உண்டாக்கும் என்றுதானே எதிர்பார்த்திருந்தீர்கள்? முதல்முறையாக உங்களைப் பார்த்துச் சொல்கிறேன் – நீங்கள் தான் பேரழிவை உண்டாக்குபவர்கள்!” என்று செய்தியாளர்களை நோக்கிக் கூறினார் எல்ஸின். இதைக்கேட்ட கிளிண்டனுக்கு சிரிப்பு தாங்கவில்லை. கண்ணீர் வரும்வரை சிரித்துவிட்டு, எல்ஸினின் முதுகில் தட்டிக்கொடுக்கிறார். அங்கிருந்த செய்தியாளர்களிடம், “இதன் அர்த்தத்தை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்” என்றபடியே மீண்டும் சிரிக்கிறார்.

பேச்சு சாதுர்யமிக்க எல்ஸின், முக்கியப் பேச்சுவார்த்தைகளை கேலி செய்வது வழக்கமாக இருந்தது. இருப்பினும் அன்று எல்ஸின் போதையில் உளறியதை திசைதிருப்பவே, கிளிண்டனும் இவ்வளவு சிரித்து நிலைமையைச் சீராக்கினார். முக்கியப் பதவிகளில் அங்கிருந்த அதிகாரிகளுக்கும் இது தெரிந்திருந்தது. அவரவர் சுய சரிதைகளில் இதுபற்றி கூறியவையே இதற்குச் சான்று.

கிளிண்டனுடனான முதல் சந்திப்பின் போதிருந்தே (1994) எல்ஸின் போதைக்கு அடிமையாகியிருந்தார். கிளிண்டனும் இதை சமாளித்தே வந்திருக்கிறார். நள்ளிரவில் பீட்சா வேண்டுமென்று, குடிபோதையில், வாஷிங்டன் தெருக்களில் இறங்கி டாக்ஸி பிடித்துக்கொண்டு சென்றிருக்கிறார் எல்ஸின். இதைப் பற்றிய கேள்விக்கு கிளிண்டனின் பதில், “அவருக்கு ஒருவழியாக பீட்சா கிடைத்தது.” என்பதே. எல்ஸினின் செயலை விடவும், இச்சம்பவத்தின் பாதுகாப்பு அத்துமீறல்களே கிளிண்டனுக்குக் கவலை அளித்தன. நடக்கவும் தள்ளாடும் எல்ஸினின் நிலையை மெல்ல உலகமே வீடியோக்கள் மூலம் தெரிந்துகொண்டது.

நாட்டு அதிபரின் ஆளுமையைக் கொண்டே, இருநாட்டு உறவுகளையும் தீர்மானித்தார், கிளிண்டன். எல்ஸினுக்கு மட்டுமல்ல, அவரது ஜனநாயகக் கொள்கைக்கும் இவரே பொறுப்பெடுத்துக் கொண்டார். எல்ஸின் 96, கிளிண்டன் 96 என்று பொறிக்கப்பட்ட ஹாக்கி ஜெர்சிகளைப் கிளிண்டனுக்குப் பரிசளித்தார் எல்ஸின். அமெரிக்க இடையர்கள் பயன்படுத்தும் பூட்ஸ் காலணிகளைப் பரிசளித்தார் கிளிண்டன். இருவரின் காலணி அளவுகளும் ஒத்துப்போக, காலணிகளைப் பரிமாற்றம் செய்து கொள்ளுமளவுக்கு இருந்தது அவர்களின் நட்பு. பாதுகாப்புக் காரணங்களுக்காக இது தடுக்கப்பட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!