புதியதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலம் பாதுகாப்புக் குறைபாடுகளுடன் கட்டப்பட்டிருக்கிறது என்று ஆய்வு முடிவு வந்திருக்கிறது. மடித்த வலது கையில் புத்தகமும், இடது கையின் ஆட்காட்டி விரல் நீண்டும் இருக்கும் அறிஞர் அண்ணா சிலை போன்று இந்திய வரைபடத்தின் வலது ஓரத்தில் அமர்ந்திருக்கிறது ராமேஸ்வரம் தீவு...
Tag - தமிழ்நாடு
“மதச்சார்பற்ற, ஊழலற்ற அரசியல் தான் எங்கள் நிலைப்பாடு. கரப்ஷன் கபடதாரிகளின் மோடி மஸ்தான் வேலை எங்களிடம் எடுபடாது” என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி வி சாலையில் ஞாயிறன்று நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் கட்சியின் கொள்கைகளை...
யூட்யூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கி மீண்டும் மன்னிப்பு கேட்டிருக்கிறார். லைக் போடுங்க, கமென்டு போடுங்க, சப்ஸ்க்ரைப் பண்ணுங்க என்று சொல்வதுபோல ஒவ்வொரு வீடியோ வெளியிட்ட பிறகும் மன்னிச்சிடுங்க என்று கேட்க ஆரம்பித்துவிடுவார் போல. இர்ஃபான்ஸ் வ்யூ எனும் தலைப்பில் யூடியூப் சானல், இன்ஸ்டாகிராம்...
மொத்தம் முப்பத்து மூன்று நிபந்தனைகள். அதில் பதினேழு நிபந்தனைகளைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு, காவல்துறை சார்பில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்குத் தனியிடம் மற்றும் இருக்கைகள். மாநாடு நடக்கும் இடத்தில்...
திமுகவின் அதிகார்பூர்வ நாளேடான முரசொலியின் முன்னாள் ஆசிரியர், முரசொலி செல்வம் (83) உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த பத்தாம் தேதி காலமானார். இவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் மைத்துனருமாவார். நீதிக்கட்சித் தலைவர் பன்னீர்செல்வம் நினைவாக கருணாநிதி...
அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த இந்திய விமானப் படை சாகச நிகழ்வு அதிகம் பேர் கண்டுகளித்த வான் சாகச நிகழ்ச்சி என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளது. இந்திய விமானப் படையின் சாகசக் காட்சிகள் ஒவ்வொன்றும் அருமையாக இருந்தன. பல இலட்சம் மக்கள்...
ஒரு வழியாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பதவியேற்றுவிட்டார். பல நாட்களாகத் தொடர்ந்து வந்த விவாதம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இதை முன்னிறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து வெளிப்பட்ட கருத்து தான் கடந்த வாரத்தில் தமிழக அரசியல் சூழலில் பெரிதும் விவாதிக்கப்பட்டது. விடுதலைச்...
கூகுள், பேபால், அப்ளைட் மெட்டீரியல்ஸ், அமேசான் வெப் சர்வீசஸ் உட்பட பல முன்னணி நிறுவனங்களின் முதலீடுகளைத் தமிழகம் இந்த மாதம் பெருமளவில் ஈர்த்திருக்கிறது. எல்லாமே செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி தொடர்பானவை. இத்தனை நிறுவனங்கள் இந்தத்துறை சார்ந்து ஒரே நேரத்தில் இந்தியாவின் ஒரு மாநிலத்தில்...
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா சென்று பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். விரைவில் இந்தியப் பிரதமர் மோடியும் அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்தியா முழுவதற்குமான பொருளாதார நலனை முன்வைத்துப் பேச்சுவார்த்தைகள் நடத்துவதும் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவதும் நோக்கம். ஸ்டாலின்...
வட சென்னையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் 200 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். “திமுக உருவானதும் வட சென்னையில்தான்; முதல்வரான என்னை, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்ததும், இந்த வடசென்னை கொளத்தூர் தொகுதி மக்கள்தான்.” என்று நினைவுகூர்ந்துள்ளார். தி.மு.க...