Home » ஆபீஸ்

Tag - ஆபீஸ்

தொடரும் நாவல்

ஆபீஸ் – 34

34 வம்பு வண்ணதாசன் பேச்சைக் கேட்டுத் திரும்பிவந்திருக்கக் கூடாதோ என்று தோன்றிற்று. போபோ போய் வேலையைப் பார் என்பதைப்போல விரட்டாதகுறையாய் அனுப்பிவைத்த ஏசி மீது எரிச்சலாய் வந்தது. இந்த ஆபீஸ் அந்த ஆபீஸ் அந்த ஏசி இந்த அதிகாரி என்று எவனும் வேறில்லை. எண்ணத்தில் செயல்பாட்டில் அதிகாரத்தில் எல்லாம் ஒன்றுதான்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 33

33 மண்ணும் மனிதர்களும் வாசலில் போய் நின்றதும் வாங்க வாங்க என்று வாய்நிறைய அழைத்தார் ஜீவா. அந்த நொடியே, எங்கோ முன்பின் தெரியாத இடத்திற்கு வந்திருக்கிறோமே என்று மனதில் இருந்த லேசான கிலேசமும் அகன்றுவிட்டது. படியேறி உள்ளே சென்றான். பெரியாரைப் போல தாடியுடன் கருப்புச்சட்டை அணிந்திருந்த பெரியவர் ஒருவர்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 31

31 போனதும் வந்ததும் குர்த்தாவின் கைகள் இரண்டையும் ஒரே அளவில் இருக்கும்படியாக, நான்கு விரற்கடை அகலத்தில் பட்டையாக மடக்கி  மடக்கி முழங்கை முட்டிக்கு மேல் ஏற்றி விட்டால், இலக்கியச் சிந்தனை போன்ற கூட்டங்களில் கேள்வி கேட்க கம்பீரமாக இருக்கிறது என்று ஆரம்பித்த பழக்கத்தில் அன்று மெனக்கெட்டது வம்பாகப்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 29

29 வந்துடு   உச்சி வெயில் மண்டையைச் சுட்டது. கலைவாணர் அரங்கத்தில் ஏதாவது படம் இருக்குமே என்று தோன்றவே ரிச்சி தெருவிலிருந்து அப்படியே வாலாஜா ரோடுக்காய் போனான். வரிசையில் நின்றிருக்கையில் சென்னை ஃபில்ம் சொசைட்டி சிவக்குமார் தென்படவும் ஹலோ என்றான். என்ன, எதோ கேள்விப்பட்டனே என்றான் அவன்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 28

28 வேட்கையும் பிரசாதமும் மாலையில் ஆபீஸை விட்டுக் கிளம்பி, டிராபிக் குறைந்து சாலையைத் தாண்டி எதிர்ப்புறம் போக வழி கிடைக்கவேண்டி,வண்டி வளாகத்தின் கதவருகில் காத்திருக்கையில், வாயில் சிகரெட் புகைய துச்சமாகப் பார்த்த அந்த முகம் – கருப்புக் கண்ணாடிக்குள்ளிருந்து தெரிந்த, இரவெல்லாம் தூங்கவிடாமல்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 27

27 கரையும் கடல் ஆபீஸிலிருந்து கிளம்பிய சைக்கிள், டிரைவ் இன்னுக்காய் திரும்பாமல் நேராகப் போயிற்று. எப்போது இருட்டிற்று என்று ஆச்சரியமாக இருந்தது. எதிரில் காந்தி சிலை தெரிந்ததும் ராணி மேரி கல்லூரிக்காய் திரும்பி பீச் ரோடில் போகத் தொடங்கிற்று. விவேனந்தர் இல்லத்தைத் தாண்டி, பெரிய பெரிய தூண்களுடன்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 26

26 விதி ஹலோ என்ன வெள்ளைப் பேப்பரை எல்லாம் கடிதம் என்று அனுப்ப ஆரம்பித்துவிட்டீர்கள் என்று, அனுப்புநர் முகவரியில் அவன் அடித்திருந்த முத்திரையைப் பார்த்துவிட்டு,  ஏசி பிரஸாதின் நேரடி லைனிற்கு வந்திருக்கிறார் சாஸ்திரி பவனில் இருக்கிற அந்த அலுவலகத்தின் உயர் அதிகாரி.  வெள்ளைத் தாள் வந்ததை அவர்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 25

25.  ஏன்  ஆபீஸ் கட்டடத்தை ஒட்டி சற்றே பின்னால் இருந்த கேண்டீனில் காபி வாங்கிக்கொண்டு வந்து, அலுவலகத்தின் பிரதான வாயிலுக்கு எதிரிலிருந்த வருமானவரி அலுவலக தபால் ஆபீஸின் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டான். ஏசி பிரசாத் இன்னும் எல்லோரையும் கடித்துக்கொண்டுதான் இருந்தார் என்றாலும் தன் பக்கம் வருவதில்லை...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 24

24 எப்படி  ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்த ஆபீஸ் வேலை – மனதைச் செலுத்தாமல் சாமர்த்தியமாகச் செய்வது எப்படி என்கிற குறுக்கு வழிகள் கொஞ்சம்  கொஞ்சமாகப் பிடிபடத் தொடங்கியதும் – அடச்சே இது ஒரு விஷயமா என்கிற அளவிற்கு ஒன்றுமில்லாததாக ஆகிவிட்டது என்றாலும் அவன் எதிரில் நின்று பூதம்போல மிரட்டிக்கொண்டு...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 23

23 வாழ்வது எப்படி  அம்மாவுடன் வாழ முடிந்தால், யாருடனும் வாழ்ந்துவிட முடியும் என்று சமயங்களில் தோன்றும்.  இத்தனைக்கும் பிறந்தது முதல் அம்மாவுடன் மட்டுமே வாழ்ந்துகொண்டிருப்பவனாக அவன் இருந்தான். அம்மா வழி தாத்தா பாட்டியைப் பார்த்த நினைவே இல்லை. அவனுக்கு மூன்று வயதாகும்போதுதான் அவளுடைய அப்பா...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!