Home » எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது.
வென்ற கதை

எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது.

சௌபாக்கியா வெட் கிரைண்டர் ஆதிகேசவன் வென்ற கதை.

‘வீட்டின் வெட் கிரைண்டர் அடிக்கடி பழுதாகி விடும். அதை நானும் என் தந்தையுமே சரி செய்து ஓட்டுவோம். அந்நாளில் கிரைண்டர் ரிப்பேர் என்பது பெரும் பாடு. அதில் சலித்துப் போய், நாம் இதே வெட் கிரைண்டரை நல்ல தரத்தில் உற்பத்தி செய்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. ஆரம்பித்தோம். இன்றைக்கு நான் எந்தக் கல்லூரியில் உதவாக்கரை என்று ஏசப்பட்டு வெளியில் நிறுத்தப்பட்டேனோ, அதே கல்லூரிக்கு தாளாளராக இருக்கிறேன். எந்த ஆசிரியர் என்னை தண்டித்து வெளியே நிறுத்தினாரோ, அதே ஆசிரியர் ஓய்வு பெற்றதற்கு சால்வை போர்த்தி, நினைவுப் பரிசு கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறேன். அன்றைக்கு என்னிடம் எதுவும் இல்லை என்று சோர்ந்து போகவும் இல்லை. இன்றைக்குக் கிடைத்துள்ள உயர்வால் பெருமையும் ஏற்படவில்லை. எதற்கும் கலங்காதவன் என்றிருக்கவே எப்பவும் நான் விரும்புகிறேன்!’ என்கிறார் ஆதிகேசவன். சௌபாக்கியா வெட் கிரைண்டர் இவருடைய தயாரிப்புதான்.

கோவை வட்டாரத்தில் எழுபதுகளில் மிக எளிய குடிசைத் தொழிலாக ஆரம்பிக்கப்பட்டதுதான் வெட் கிரைண்டர் இயந்திர உற்பத்தி. இன்றைக்கு இந்தத் துறையில் ஏகப்பட்ட பேர் வந்துவிட்டார்கள். அரசு இலவச கிரைண்டர் திட்டத்தை ஆரம்பித்த பிறகு பெரிய நிறுவனங்கள் பல தோன்றி ஆர்டர் பிடித்துக்கொள்ள, இந்தக் குடிசைத் தொழில் சரியத் தொடங்கியது. ஆனாலும் குடிசைத் தொழிலாகத் தொடங்கிய ஒரு சிலர் மட்டும் போராடி வென்றிருக்கிறார்கள். அதில் ஒருவர் ‘சௌபாக்கியா’ ஆதிகேசவன்.

எப்படி வென்றார்கள் இவர்கள்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • நம்ம ஊரு கதை. நல்லாருக்கு. வாடிக்கையாளர்ட்டய ஆர்டர் புடிக்க கேட்டிருக்கிறார்.

  • எத்தனையோ வெற்றி கதைகளை படித்திருந்தாலும் ஒவ்வொன்றும் தனிரகம்.
    எத்தனை விதமான வாடிக்கையாளர்கள் அடடா!
    தொழிலை அடுத்த தலைமுறைக்கு வெற்றிகரமாக நகர்த்துவது சாமான்ய காரியமல்ல..அதிலும் வெற்றி பெற்றிருப்பது சிறந்த பிள்ளை வளர்ப்புக்கலை!
    இக்காலத்து பிள்ளைகள் பணத்தின் அருமை தெரியாமல் டெபிட் கார்டை தேய்த்து காலி பண்ணுவது தான் பார்த்திருக்கிறோம்.பொறுப்பான பிள்ளைகள்!அருமை.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!