Home »  ஊர் சுற்றுங்கள்!
வென்ற கதை

 ஊர் சுற்றுங்கள்!

சீலன் சுப்பிரமணியம்

‘அப்போது எனக்குப் பதினான்கு வயது இருக்கும். வீதிச் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். பறந்து செல்லும் விமானத்தின் சத்தம் கேட்டு அண்ணாந்து பார்த்தேன். சட்டென்று ஒரு பிரமிப்பு எழுந்தது. கீழே நிற்கும்போது எவ்வளவு பெரிய தோற்றம். உயரத்தில் பறக்கும்போது சிறிதாகத் தெரிகிறது. ஆனாலும் விமானம் என்றால் பிரம்மாண்டம்தான். தவிர, எவ்வளவு பேரை ஏற்றிக்கொண்டு பறக்கிறது! புவியீர்ப்புக்கு எதிரான ஒரு செயல்பாடு என்பது எப்பேர்ப்பட்ட விஷயம்!

பிரமித்தபடி பார்த்துக்கொண்டிருந்தபோது என் தந்தை என் தோளைத் தொட்டார். ‘அதேபோல் நீயும் விமானத்தில் போகணும்னு ஆசையா இருக்கு இல்லியா?’ என்றார். ‘ஆமாம்’ என்று தலையாட்டினேன். அதோடு நிற்காது, ‘அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு இப்படியெல்லாம் நாடுகளுக்குப் போக வேண்டும்!’ என்று எனக்குத் தெரிந்த நாடுகளை எல்லாம் சொன்னேன். ‘அதற்கு நீ முதலில் நன்றாகப் படிக்க வேண்டும். கவனம் சிதறக்கூடாது. எதையும் துணிந்து செய்யும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் நீ நினைத்த நிலைகளையெல்லாம் அடைய முடியும்!’ என்றார்.

அதன் பின் என் கவனம் படிப்பிலேயே இருந்தது. மதிப்பெண்கள் உயர ஆரம்பித்தன. வானத்தில் விமானத்தைப் பார்த்தபோது படிப்பில் சுமாரான மாணவனாக இருந்தவன், வானத்தில் பறக்க வேண்டும் என்ற குறிக்கோள் மனத்தில் தோன்றியவுடன் சில மாதங்களிலேயே வகுப்பில் முதல் மாணவனாகத் தேற ஆரம்பித்தேன்.

இன்றைக்கு எண்பது தேசங்களுக்கும் அதிகமாகச் சென்று வந்திருக்கிறேன். வாழ்வதே விமானத்தில்தான் என்னும்படியாக. ஒரே காரணம், அன்று என் தந்தை சொன்ன அந்த வார்த்தை…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!