Home » ரோட்டுக்கடை அத்தாட்டி சுண்டல்
உணவு

ரோட்டுக்கடை அத்தாட்டி சுண்டல்

புத்தகக் கண்காட்சியின் கூரைகள் உயரமாகப் பிரம்மாண்டமாகவே இருந்தன. ஆனாலும் உள்ளே போன ஐந்து நிமிடங்களில் புழுங்கித் தள்ள ஆரம்பித்து விடுகிறது. குளிர்காலத்திலும் வியர்வை ஊற்றெடுக்கிறது. உள்ளிருந்து வந்ததபின்தான் மூச்சு நிறையக் காற்றுக் கிடைத்த உணர்வு.

வெளியில் வழிநெடுக வட்ட அடுக்கில், குச்சி குச்சியாய் கேரட் மாங்காய் வேலி போட்ட சூடான சுண்டலை சுற்றிச்சுற்றி வந்து விற்றுக் கொண்டிருந்தனர். சுண்டலின் உப்பு நாக்கில் படும்போதெல்லாம் கடற்கரையின் உப்புக்காற்று தானாக மண்டைக்குள் புகுந்து விடும். இம்முறை பீச்சோடு மற்றுமொரு மசாலா அரோமாவும் நினைவுக்கு வந்தது.

“பெங்களூர்ல மசாலா பட்டாணி சுண்டல்னு விக்கறான். ரோட்டு கடைதான். அதுக்கு எவ்வளவு கூட்டம் தெரியுமோ? சுண்டல்னா ஒத்தை ஒத்தையா கடலை கடலையா நிக்காது. மசாலாவில் ஊறி ஒண்ணும் அரையுமா சிதைஞ்ச பட்டாணியை தொன்னையில வைச்சுத் தரான். அது மேல இன்னுங்கொஞ்சம் மசாலா தண்ணியை கொதிக்க கொதிக்க ஊத்தறான். ஒரு ஸ்பூன் புதினாச் சட்டினியை அதுந் தலைல சுத்தி விட்டு, ரெண்டு மசால் வடையை உள்ளங்கையில வச்சு நசுக்கிப் போடறான். அந்தச் சூடு, சுண்டல் மசாலா வாசனை, அப்பப்போ நொறுமுறுன்னு கடிபடற வடை… ஆஹா… அப்டி அமிர்தமா இருக்கும்.” கண்களை அரைவாசி மூடி மூன்று விரல்களை நிமிர்த்தி லயித்துச் சொன்னார் அத்தைப் பாட்டி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!