Home » வயதுக்கு ரிவர்ஸ் கியர் போடலாம்!
மருத்துவ அறிவியல்

வயதுக்கு ரிவர்ஸ் கியர் போடலாம்!

நமது உடலில் ஓடும் இரத்தத்தில் பல்வேறு இரகசியங்கள் பொதிந்துள்ளன. அவற்றுள் இளமை திரும்புவதற்கான காரணிகளும் அடங்கும். மனிதன் உட்படப் பல்வேறு விலங்குகளின் உடலில் ஓடும் குருதியின் திரவப் பகுதி பிளாஸ்மா (Plasma) எனப்படும். இளம் வயது விலங்கின் பிளாஸ்மாவினை முதிர்ந்த விலங்குகளுக்கு அளிக்கும்பொழுது அந்த முதிர்ந்த விலங்குகளின் வயது குறைவதாகப் பல்வேறு ஆய்வுகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துக் கூறியுள்ளன.

இதனை மேலும் பரிசோதிக்கும் விதமாக அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதற்கு முன் நடத்தப்பட்ட அனைத்து ஆய்வுகளிலும் ஒரே இனத்தினைச் சார்ந்த விலங்குகளிடத்தில் மட்டுமே இந்த இரத்தப் பரிமாற்றங்கள் நடத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டிருந்தன. உதாரணமாக ஓர் எலியிலிருந்து மற்றொரு எலிக்கு. இதற்கு மாறாக இந்த கலிபோர்னியா ஆய்வில் இளம் பன்றியின் இரத்தத்திலிருந்து பெறப்பட்ட ப்ளாஸ்மா வயது முதிர்ந்த எலிகளுக்கு அளிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. அதாவது ஒரு வகை விலங்கிலிருந்து பெறப்பட்ட ப்ளாஸ்மா மற்றொரு வகை விலங்கிற்கு அளிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்படிச் செய்வதில் என்ன விசேஷம் இருக்கிறது?

விசேஷம் உள்ளது. ஒருவேளை இந்த ஆய்வு மனிதர்களிடத்தில் நடத்தப்பட்டு அதில் வெற்றியும் ஏற்பட்டால், வயது குறைப்பதற்கான மருந்துகளைத் தயாரிக்கத் தேவையான மூலப் பொருள்களை அதிக அளவில் தயாரிக்கப் பன்றிகளின் ப்ளாஸ்மாவினையே பயன்படுத்திக் கொள்ள முடியும். பன்றிகளுக்குப் பதிலாக மனித இரத்தத்திலிருந்து தருவிக்கப்பட்ட ப்ளாஸ்மாவினை பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டால் என்ன ஆகும்? பல்வேறு விதமான மூலக்கூறு தட்டுப்பாடு, தயாரிப்புச் செலவு மற்றும் அறம் சார்ந்த சிக்கல்கள் பல ஏற்படும். அந்த விதத்தில் தற்போதைய ஆய்வு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!