Home » புற்றுச் செல் மருந்துகள்: ஒரு புதிய இலக்கு
மருத்துவ அறிவியல்

புற்றுச் செல் மருந்துகள்: ஒரு புதிய இலக்கு

புற்றுச் செல் மருந்துகள் தாக்க ஒரு புதிய இலக்கு

மருந்தியல் துறையில் ஒரு மருந்து கண்டுபிடிக்கப் பல விசயங்கள் தேவைப்பட்டாலும், தேவையான மிக முக்கியமான விசயம் டார்கெட் (Target) எனப்படும் இலக்கு. இலக்கு ஒன்று இருந்தால்தான் அந்த இலக்கினைத் தாக்கி அழிக்க மருந்துகள் கண்டுபிடிக்க முடியும்.

புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சவாலாக உள்ள ஒரு விசயம், புற்றுநோய் மருந்துகள் வினைபுரியத் தேவையான இலக்குகளைக் கண்டறிவதுதான். நமது உடலில் 10 இலட்சம் கோடிக்கும் அதிகமான செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லிலும் சுமார் 640 கோடி பேஸ்கள் உள்ளன. ஆக ஒரு மனிதனின் உடலில் பல்லாயிரக்கணக்கான கோடி பேஸ்கள் இருக்கும். இந்த பேஸ்கள் தான் டிஎன்ஏ-வினை உருவாக்கப் பயன்படும் அடிப்படை கட்டுமான வேதிப் பொருட்கள்.

இந்த பேஸ்கள் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. இந்தக் கோடிக்கணக்கான பேஸ்களில் எங்கு வேண்டுமானாலும் பிழைகள் ஏற்படலாம். இவற்றுள் ஏற்படும் பிழைகள் புற்று நோய் உட்படப் பல்லாயிரக்கணக்கான நோய்கள் தோன்ற காரணமாகின்றன. ஒவ்வொரு புற்றுநோயாளியின் உடலிலும் வெவ்வேறு விதமான மரபணுப் பிழைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஒரேவிதமான மருந்தினைக் கொண்டு எல்லோருக்கும் சிகிச்சை அளிக்க முடியாது. குறைந்தபட்சம் ஒத்த பிழைகளையுடையவர்களுக்கு ஒரே மருந்தினைக் கொண்டு சிகிச்சை அளிக்க முயலலாம். எனவே எந்த அளவிற்கு அதிகமான இலக்குகள் கண்டுபிடிக்கப்படுகின்றனவோ அந்த அளவிற்கு அதிகமான நோயாளிகளைக் குணப்படுத்த முடியும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!