Home » ராமோஜி ராவ்: பிரியா ஊறுகாய் முதல் பிலிம் சிட்டி வரை
ஆளுமை

ராமோஜி ராவ்: பிரியா ஊறுகாய் முதல் பிலிம் சிட்டி வரை

ராமோஜி ராவ் காரு

ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் இருந்தது இன்றைய கிருஷ்ணா மாவட்டம். அந்த மாவட்டத்தில் உள்ள பெதபருபுடி என்ற கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த அச்சிறுவன் சாதாரணமாகப் பிறந்து, வாழ்ந்து, செல்வதற்காகத் தான் பிறக்கவில்லை என்பதை உணர்ந்திருந்தான்.

சிறு வயதிலேயே ஊறுகாய்ப் போத்தல்களை வீடு வீடாகச் சென்று விற்கும் பழக்கம் இருந்தது அவனுக்கு. தினம் முப்பது கிலோமீட்டர் வரை சைக்கிளில் சென்று அந்தத் தொழிலைச் செய்தான். விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் அவர்களின் நலன் மனதில் அவன் ஓடிக்கொண்டே இருந்தது. இடதுசாரிச் சிந்தனையுடைய அவ்விளைஞன் தெலுங்கு இலக்கியம் படித்தான். படித்த இலக்கியமும் எழுத்தார்வமும் இணைந்து கொள்ள அவன் விவசாயிகளுக்கு நன்மையளிக்கும் வகையில் ஒரு பத்திரிகை ஆரம்பிக்க விரும்பினான். அந்தக் காலத்தில் தனிப்பட்ட ஒரு வகையினருக்கான வார இதழ்களோ மாத இதழ்களோ வெளியாகாத நிலை. துணிந்து இறங்கினான். அப்படி அவன் வெளியிட்ட இதழ்தான் அன்னதாதா. பொருத்தமான பெயருடன் தொடங்கப்பட்ட இந்தப் பத்திரிகை பெயர்பெறத் துவங்கியது. விற்பனையும் அதிகரிக்க ஆரம்பித்தது. அந்தச் சிறிய இதழ்தான் மிகப் பெரியதொரு பத்திரிக்கை சாம்ராஜ்யம் உருவாகக் காரணமாக இருந்தது. அந்த இளைஞனின் பெயர் செருகுரி ராமோஜி ராவ்.

சனிக்கிழமையன்று (08.05.2024) தெலுங்கு படப்பிரபலங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் மிக அதிர்ச்சியான தகவலுடன் விடிந்தது. ஆந்திராவின் மிகப்பெரிய எழுத்துலக சக்தியான ராமோஜி ராவ் மறைந்து விட்டார் என்ற தகவல்தான் அது.  உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள ஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலை 4.50 மணிக்குக் காலமானார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!