Home » வேண்டுதல் வேண்டாமை
சிறுகதை

வேண்டுதல் வேண்டாமை

முட்டைக் கோப்பி அருந்திய செரமிக் குவளைகள் இரண்டும் பெட்சைடர் மீது அப்படியே கிடந்தன. கட்டிலில் இருந்து இறங்கும் போதே கேசக் கற்றைகளை அள்ளி முடிந்து கொள்கிறாள் ரீமா.

“இந்தக் கோப்பைகளுக்காகவே தினமும் கோப்பி சாப்பிடலாம் ”

“டிசைன் நல்லாருக்கா?”

“இல்ல, குட்டிக் கோப்பை. க்யூட்டா இருக்கு”

“கோப்பிக் கோப்பைனாலே சின்னதாதாண்டி இருக்கும்”

சமையல் கட்டுக்குப் போகும் வழி இப்போது கொஞ்சம் பழக்கமாகி இருந்தது. பழைய காலத்து வீடு. தேவையற்ற திருப்பங்களும் இடைவெளிகளும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தன. நேரே போய், மூன்று முறை இடப்புறம் திரும்பினால், நீண்டதொரு காரிடார் வரும். அதன் அந்தத்தில் இருப்பது சமையலறையின் தொடக்கம். ரீமாவின் கையிலிருந்த செரமிக் குவளைகள் சிணுங்கிக் கொண்டே இருந்தன. யாராவது சமையல்கட்டுப் பக்கம் வந்து விடுமுன், அவசர அவசரமாகக் கோப்பி மண்டியை வெளியே ஊற்றிக் கழுவி வைத்தாள். கிச்சன் ஜன்னலினூடாகப் பார்க்கும் போது இருட்டாகத் தெரிந்தது. கறிவேப்பிலைச் செடி மீது கோப்பிக் கறை படிந்து சாயமேறியிருந்தது. பின் வீட்டுக் குப்பை வாசனை மூக்கில் ஜிவ்வென்று தைத்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!