Home » தபால் மூலம் அபார்ஷன்
உலகம்

தபால் மூலம் அபார்ஷன்

இந்தியாவில் கருச்சிதைவுக்கு ஆதரவாக 1971-இல் இயற்றப்பட்ட சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு இப்போது 20 வாரங்கள் வளர்ச்சியடைந்த கருவைக்கூடக் கலைக்க அனுமதியளித்து உலகிலேயே பெண்களுக்கு அதிக உரிமையளிக்கும் சட்டமாகியிருக்கிறது. ஆனால், பல பெண்களுக்கு உண்மையிலேயே இதன் நுட்பம் புரியவில்லை. அதனாலேயே உலகில் மற்ற நாடுகளைவிட மிகஅதிக அளவில் மருத்துவர் உதவியின்றி கருக்கலைப்பு நடக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் நடக்கும் 15 மில்லியன் கருக்கலைப்புகளில், 78% கருக்கலைப்புகள் சுகாதார மையங்களுக்கு வெளியிலேயே நடக்கின்றன.

15 முதல் 44 வயதுக்குள்ளான பெண்களின் கருக்கலைப்பு விகிதம் இந்தியாவில் ஆயிரம் பெண்களுக்கு 47 ஆகவும் உலக அளவில் ஆயிரம் பெண்களுக்கு 39 ஆகவும் இருக்கிறது. ஆக, இந்தக் கருக்கலைப்புகள் எப்படி நடத்தப்படுகின்றன என்றால், மிகச் சுலபமாகக் கிடைக்கும் இரண்டு மருந்துகளால். அவையாவன மிஃபிரிஸ்தோன், மிசொபிரிஸ்தால் (mifepristone and misoprostol). இந்த இரண்டு மருந்துகளில் ஒன்று கரு வளரத்தேவையான ப்ரொஜெஸ்டிரோன் என்ற ஹார்மோன் உற்பத்தியைத் தடுக்க வல்லது. மற்றொன்று கருப்பையைச் சுருங்க வைத்து கருவை வெளியேற்றுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!