Home » ஃபதாயிர், மனாஈஷ் மற்றும் ஒரு மார்க்கமான சாலட்
உணவு

ஃபதாயிர், மனாஈஷ் மற்றும் ஒரு மார்க்கமான சாலட்

எப்போதும் கொலைகள். எப்போதும் குண்டு வீச்சு. நிலமெல்லாம் காலம் காலமாகக் காயாத ரத்தம். சொல்ல முடியாத வலிகள், வேதனைகள். நாளை விடியுமா என்பது முதல் கவலை. விடியும்போது நாம் இருப்போமா என்பது நிரந்தரக் கவலை. நாம் கன்னி ராசிக்குப் பலன் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவர்கள் கண்ணி வெடிகளை எடுத்துக்கொண்டிருப்பார்கள். ஒரு பண்டிகை என்றால் நாம் பட்டாசு வெடிப்போம். அங்கே அவர்களையும் அவர்தம் குடியிருப்புகளையும்தான் வெடி வைத்துத் தகர்ப்பார்கள். சொல்லத் தரமற்ற வாழ்க்கை. ஆனால் அத்தனை அவலத்திலும் சமையல் உள்பட வாழ்வின் அத்தனை அம்சங்களையும் கலையுணர்வுடனேயே அணுகுவது என்பதுதான் பாலஸ்தீனியர்களின் தனிச் சிறப்பு.

துபாயில் எல்லா நாட்டு உணவும் கிடைக்கும். ஏனெனில் இங்கே எல்லா நாட்டுக்காரர்களும் வந்து போய்க்கொண்டிருப்பார்கள். அமெரிக்க உணவு, பிரிட்டிஷ் உணவு, எகிப்து உணவு, லெபனான் உணவு முதல் நம்மூர் சரவண பவன் உணவு வரை எல்லாமே உண்டு. பாலஸ்தீனை ஒரு நாடாக உலகம் இன்னும் முழு மனதாக அங்கீகரிக்காவிட்டாலும் பாலஸ்தீன் உணவகம் திறந்து துபாய் புண்ணியம் கட்டிக்கொண்டிருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!