Home » என் கனவை விட்டுச் செல்கிறேன் – 3
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 3

ஓவியம்: ராஜன்

3. வசந்த மாளிகை

‘காமம், மிகவும் அழகானது. ஏனெனில் அது இயற்கையானது. உனது இயற்கைத்தன்மையை நீ முழுமையாக ஏற்றுக் கொள்ளும்போது மகத்தான மாறுதல் ஒன்று நிகழ்கிறது. எல்லா மதவாதிகளும் அழித்துக் கொண்டிருக்கும் ஒரு புதிய அம்சம் உனக்குள் உருவாகிறது. அவர்கள் உன்னை நீ ஏற்றுக் கொள்வதை அழித்துவிடுகிறார்கள். அது மிகப் பெரிய குற்றம் போல உனக்குள் ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். உன்னை உனக்கு எதிராகத் திருப்பிவிட அதுவொரு எளிதான வழி. ஆனால் நீ உன் இயல்புக்கு எதிராகச் செல்ல முடியாது. நீ தான் இயற்கை. இந்துக்கள், முகமதியர்கள், கிறித்துவர்கள், பௌத்தர்கள் இவர்களின் மடாலயங்கள் முழுக்கப் போலிகள் நிரம்பியுள்ளனர். மரியாதைக்குரிய ஒருவரைக் கூடப் பார்க்க முடியவில்லை. அனைத்து விதமான வக்கிரங்களையும் இந்த மதங்கள் உலகில் உருவாக்கி விட்டன. நீ உன் காம உணர்ச்சியை அடக்கும்போது அது இயற்கைக்கு மாறான முறையில் வழியத் தொடங்கும். இயற்கையை உன்னால் தடுத்து நிறுத்த முடியாது. அது வேறு பாதையைக் கண்டுபிடித்து விடும். ஆண்களையும் பெண்களையும் தனியாகப் பிரித்து வைத்தால் ஓரினச் சேர்க்கை உறவுகள் உண்டாகி விடும்.’

From the false to truth -இல் ஓஷோ இவ்வாறு எழுதுகிறார்.

உடல்தான் ஆலயம். உடல் மூலமாகத்தான் இறைவனை தரிசிக்க முடியும். உடல், அதன் இறைச்சி, அதன் ரத்தம் ஓர் ஆலயமாக மாறும். உள்ளிருந்து எழும் இந்த ஆலயத்தின் ஊதுவத்தி மணம் உன் பிரார்த்தனையாக மாறும் என்று Sex to superconciousness புத்தகத்தில் விளக்குகிறார்.

காதல் இயல்பானது. காமம் இயல்பானது. அதனால்தான் காதலையும் காமத்தையும் உணர்வது எளிது; விளக்குவது கடினம். மதங்கள் காதலையும் காமத்தையும் போலியாக்கி விட்டன. காதலின் அத்தனை நீரோடைகளையும் தடுத்து நிறுத்தி விட்டன என்பார் ஓஷோ.

இறைவன் படைப்பில் ஆபாசம், அசிங்கம் என்று ஒன்றுமில்லை. அனைத்தும் அமுதம்தான்…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!