Home » ஒரு குடும்பக் கதை – 3
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 3

ஆனந்த பவனம்

3. பெரும் பணக்காரர்

சிப்பாய் கலகத்தின்போது, பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு உதவி செய்ததற்காக அன்றைய ஐக்கிய ராஜதானியில் (இன்றைய உத்தர பிரதேசம்) உள்ள எடவா மாவட்டத்தில் ராஜா ஜஸ்வந்த் சிங் என்ற பெரும் பண்ணையாருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கொஞ்சம் அசையா சொத்துகளைக் கொடுத்தது. ராஜா ஜஸ்வந்த் சிங்குக்கு ஏற்கெனவே சொத்து அதிகம். மூன்று மனைவிகள். முதல் மனைவி மூலமாக பல்வந்த் சிங் என்று ஒரு மகனும், மூன்றாவது மனைவி மூலமாக மகாலட்சுமி பாய் என்ற ஒரு மகளும் இருந்தனர். மகன் பல்வந்த் சிங்கின் போதாத காலம் அவனது கெட்ட சகவாசம் காரணமாக ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, பதிமூன்று வருட சிறை தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்தா. இனி அவன் எனக்கு மகனல்ல என்று அறிவித்த ராஜா ஜஸ்வந்த் சிங், தன் சொத்துகளைத் தனது மூன்றாவது மனைவியான ராணி கிஷோரி பெயரில் தானப் பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டார்.

ஆனால், சிறைக்குப் போன பல்வந்த் சிங்குக்கு எங்கோ ஒரு சிறு அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. அந்த தானப் பத்திரத்தில், ஒரு வேளை பிற்காலத்தில், பல்வந்த் சிங்குக்கு மகன் பிறந்தால், அந்த பேரப் பிள்ளை மேஜரானதும், இந்த சொத்து அவனுக்குப் போய்ச் சேர வேண்டும் என்றும் எழுதி வைத்துவிட்டார் ஜஸ்வந்த் சிங்.

1879ல் ராஜா ஜஸ்வந்த் சிங்கின் மரணத்தை அடுத்து, மொத்த சொத்தும் ராணி கிஷோரியின் கட்டுப்பாட்டில் வந்தது. அவர் அந்த சொத்துகளைப் பலரும் மெச்சும்படி நிர்வகித்து அனுபவித்துக் கொண்டிருந்தார். நாலு வருடங்கள் கழித்து, சிறைத் தண்டனை முடிந்து விடுதலையான பல்வந்த் சிங், ‘பெற்ற ஒரே மகன் நான் உயிருடன் இருக்கும்போது, என் அப்பா தன் சொத்தை ராணி கிஷோரிக்கு எழுதி வைத்தது செல்லாது’ என்று வழக்குத் தொடர்ந்தார்…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!