Home » ஒரு  குடும்பக்  கதை – 100
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 100

100. வந்தேமாதரம் விவாதம்

நேருவுக்கும், படேலுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்கிய காந்திஜி ஜனவரி 30ஆம் தேதி மாலை கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பற்றியும், காந்திஜியின் பூத உடலுக்கு முன்பாக மவுண்ட் பேட்டன் வேண்டுகோள்படி (தங்களுக்கிடையிலான வேற்றுமைகளை மறந்து) நேருவும், படேலும் ஆரத் தழுவிக்கொண்டது பற்றியும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

நேரு மென்மையான மனிதர். படேல் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று எதிலும் தீர்க்கமாக முடிவுகள் எடுக்கத் தயங்காதவர். ஆனாலும், எல்லா விஷயங்களிலும் அவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து ஒற்றுமை இருந்தது என்றும் சொல்லிவிட முடியாது. அதே சமயம், எந்த விஷயத்திலுமே அவர்களுக்கு கருத்து ஒற்றுமை இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. இருவருமே அண்ணாந்து பார்த்த காந்திஜி போன்ற ஒரு ஆளுமை இருந்தவரை கருத்து வேற்றுமைகளைத் தீர்ப்பது சுலபமாக இருந்தது.

இந்தியாவின் தேசிய கீதம் வந்தே மாதரமா? ஜன கண மன-வா? என்ற சர்ச்சை வந்தபோது, நேரு, காந்திஜியைக் கலந்து ஆலோசித்தார். நம் நாட்டின் தேசிய கீதமான ரவீந்திர நாத் தாகூரின் ஜன கண மன பாடல் மக்கள் மத்தியில் அறிமுகமாவதற்கு முன்பாகவே பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடல் அறிமுகமாகிவிட்டது. 1870 வாக்கில்  இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் “ஆண்டவன்  அரசியைக் காப்பாற்றட்டும்!” என்ற இங்கிலாந்து ராணியைப் புகழ்ந்து பாடுகிற பாடலைக் கட்டாயமாக்கினார்கள். அப்போதுதான், பங்கிம் சந்திரர், ‘வந்தே மாதரம்’ பாடலை எழுதினார். (1882-ல் தான் எழுதிய ‘ஆனந்த மடம்’ என்ற நாவலில் இடம்பெறச் செய்தார்.  ஆனாலும், அவர் இந்தப் பாடலை 1876-லேயே எழுதி விட்டார் என்றும் ஒரு தகவல் உள்ளது.)

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • தேசியகீதம் குறித்த சர்ச்சைகளை கேள்விப் பட்டிருக்கிறேன். இன்று விரிவாக அறிந்துகொண்டேன்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!