Home » ஒரு  குடும்பக்  கதை – 84
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 84

84.   தேசப் பிரிவினை

முஸ்லிம் லீக்கின் தனி நாடு கோரிக்கை, அதற்கான மிரட்டல் போக்கு, அவர்களுடன் அனுசரித்துப் போக முடியாத சூழ்நிலை  ஆகியவற்றின் காரணமாக  இந்திய அரசியலில் ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. ஆங்கிலேய அரசாங்கத்துக்கே இந்தியாவை எப்படி ஆள்வது? காங்கிரசையும், முஸ்லிம் லீக்கையும் எப்படிக் கையாள்வது என்பது புரியவில்லை.

இந்த இக்கட்டான சூழலில்தான் வேவலுக்கு பதிலாக மவுண்ட்பேட்டன் பிரபு அடுத்த வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். அவருக்கு மிக முக்கியமான ஓர் வேலை  கொடுக்கப்பட்டது. அதாகப்பட்டது- இந்தியர்களிடம் ஆட்சிப் பொறுப்பினை நல்லபடியாக ஒப்படைப்பதுதான்!

காந்திஜியும், நேருவும் பிரிட்டிஷ் அரசாங்கம் சரியான பாதையில் போய்க் கொண்டிருப்பதாகக் கருதினார்கள். இந்திய மக்கள் மத்தியிலும், பிரிட்டிஷார் மீதிருந்த வெறுப்பும், அவநம்பிக்கையும் சற்று குறைந்தது. ஆனால், பிரிட்டனில் ஆளும் தொழிற்கட்சியைச் சார்ந்த பிரதமர் அட்லியின் ஆட்சிக்கு  எதிராக கன்சர்வேடிவ் கட்சியினர் திரண்டனர்.  பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அட்லி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!