Home » ஆபீஸ் – 61
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 61

61 கொலை

‘தபால் ஆபீஸ்ல கொலையாம்’ என்றார் ஏசி டூட்டி பார்க்கிற சிப்பாய்.

‘எங்க எங்க’ என்றான் இவன்.

ஏசி சிப்பாய் சொன்னதைக் கேட்ட அதிர்ச்சியில், டிஓஎஸ் திறந்த வாயை மூடவில்லை.

எங்கே ஏன் எப்படி யார் என்று அதற்குள் உள்ளே இருந்து வந்து அவரிடம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

விசாரிக்கிற எல்லோரிடமும் ‘தெரியலீங். தெருவுல பேசிக்கிட்டுப் போனாங்’ என்று சொல்லிக்கொண்டு இருந்தார் அவர்.

அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. கால் பரபரத்தது. நாற்காலியிலிருந்து தாவி வெளியே பாய்ந்து, டீக்கடையில் போய் ‘போஸ்ட் ஆபீஸ் எங்க’ என்று கேட்டான்.

‘கொலை விழுந்த எடத்தைத்தான கேக்கறீங். புதுசா கட்டியிருக்கற போஸ்டாபீஸ்லதான்னு பேசிக்கிறாங்’ என்றார் யாரோ ஒருவர். அங்கொன்றும் இங்கொன்றுமாய், ‘இடது பக்கம் திரும்பி, வலதுபக்க சாலையில் நேராகப்போய்’ என்று துண்டுத் துணுக்காய் கிடைத்த வழியை வைத்துத் தேடித் திலாவி போய்ச்சேர்ந்தால், அந்த ஊருக்குப் பெரியதாக இருந்த கட்டடத்தின் முன் பெருங்கூட்டம் கூடியிருப்பது தூரத்திலிருந்தே தெரிந்தது. கூட்டத்தின் விளிம்பிலிருந்து மெல்ல மெல்ல ஆட்களை நாசூக்காக விலக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தான். ஆரம்பத்தில் உதிர்ந்த கறிவேப்பிலை போலிருந்த கும்பல் உள்ளே போகப்போக கட்டடத்தின் அருகில் கொத்தமல்லிக் கட்டைப்போல நெருக்கியடித்துக்கொண்டு இருந்தது. எப்படியோ தக்கிமுக்கி போலீஸுக்குப் பின்னால் அலைமோதிக்கொண்டு இருந்த கூட்டத்தின் முனைக்குப் போய்விட்டான்.

டவுன் என்று பார்த்தால், மெட்ராஸைப் பார்க்க, அந்த ஊரும் பாண்டிச்சேரி அளவுக்குதான் இருக்குமென்று தோன்றிற்று.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!