Home » ஆபீஸ் – 74
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 74

74 வார்த்தைகள்

மைசூர் வண்டியில் ஏறிக்கொண்ட பிறகு, இலங்கை அகதிகளுக்காகப் போட்ட லீவை என்னவாவது செய்து தீர்த்தாகவேண்டும் என்பதைத் தவிர மைசூருக்குப் போய்க்கொண்டு இருப்பதற்கு உருப்படியான ஒரு காரணத்தைச் சொல்லமுடியுமா என்று நினைக்க அவனுக்கு சிரிப்பு வந்தது. ஆனால், அவனுக்கு இப்படி இருப்பது பிடித்திருந்தது. காசு மட்டும் இருந்தால் கவலையின்றி மனம்போன போக்கில், இவ்வளவு பெரிதாக இருக்கிற நாட்டில் குறுக்கும் நெடுக்குமாய் திரிந்துகொண்டு இருக்கலாம். அவனைக் கலைஞனாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கலைஞர்கள் இப்படித்தான் கவலையின்றித் திரிந்துகொண்டு இருக்கவேண்டும் என்கிற நம்பிராஜன், இப்போது திருவாடுதுறை ஆதீன மடத்தில் நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டு சோற்றுக்கு நின்றுகொண்டிருப்பார் இல்லையா என்று தோன்றிற்று.

யாரும் எதையும் காரணமற்றுச் செய்வதில்லை. எதையுமே செய்யாமல் யாராலும் இருக்கவும் முடிவதில்லை – சாமியார்களைத் தவிர. சாமியார்கள் கூட முழுதாகச் சும்மா இருந்துவிட முடிவதில்லை. வந்துபோகிறவர்களுக்கு ஆறுதலாகவோ நம்பிக்கையளிக்கும் விதமாகவோ எல்லாம் தெரிந்ததைப்போல எதையாவது சொல்லிக்கொண்டு இருந்தால்தான் சாமியார் என்கிற மரியாதையுடன் கெளரவமாக இருந்துகொண்டிருக்க முடிகிறது.

பள்ளியில் உல்லாசப் பயணக் கட்டுரை எழுதவேண்டி வந்தபோதெல்லாம் அப்பாவைக் கேட்டுக்கேட்டு, செஞ்சி மைலம் மகாபலிபுரம் போய்வந்ததாக எழுதிக்கொண்டு போயிருக்கிறான். இதையெல்லாம் முதலில் அவர் பார்த்திருப்பாரா என்பதே சந்தேகம். அப்புறம்தானே அவன் பார்க்க.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!