Home » ஆபீஸ் – 58
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 58

58 பேச்சு

இந்த மாசம் செவன் சாமுராய் என்றார், வந்திருந்த தபாலைப் பிரித்துப் பார்த்த சிதம்பரம்.

ஏற்கெனவே பாத்திருக்கேன். செம படம் என்றான்.

நல்லதா போச்சு. படத்தை அறிமுகப்படுத்திப் பேச ஆள் கிடைச்சாச்சு என்று சொல்லி சிரித்தார்.

நானாவது பேசறதாவது. ஆளவிடுங்க என்றான்.

வாய் ஓயாம எப்படிய்யா இந்த மெட்ராஸ்காரரு மணிக்கணக்கா பேசிக்கிட்டே இருக்கறாருனு  உங்களைப் பத்தி எம்கேஎஸ் ஆச்சரியப்பட்டு சொல்றாரு. நீங்க, பேச வராதுனு சொல்றீங்க.

சும்மா ஃப்ரெண்ட்ஸ் கூட எதைப் பத்தியும் யோசிக்காம பேசறது வேறங்க. எதுர நாலுபேரை சேர்ல உக்கார வெச்சு,மைக் முன்னாடி நிக்கவெச்சா எனக்கு வார்த்தையே வராது. மானம் கப்பல் ஏறிடும். நீங்க வேற. படம் பாக்க வரேன். பேசல்லாம் முடியாது.

ஏங்க விடியல்ல படம் பாக்க வரவங்க மட்டும் என்ன உங்களுக்கு விரோதியா. அவங்களும் நண்பர்கள்தானே. இதுவரை அறிமுகமில்லாத நண்பர்கள். அவ்வளவுதானே. கவலையே படாதீங்க. மேடை மைக் எதுவுமே கிடையாது. மெட்ராஸ்ல உங்களுக்கு இருக்கிற எக்ஸ்போஷர் ஈரோடு மாதிரி ஒரு ஊர்ல இருக்கற எங்களுக்குக் கிடையாதில்ல. இதுக்காக மெட்ராஸ்ல இருந்து ஆளைக் கூட்டிக்கிட்டு வர முடியுங்களா. யாராவது எடுத்துச் சொன்னா, நாலு விஷயத்தைத் தெரிஞ்சிக்கணும் ரசிக்கணும்னு வரவங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்னுதான கேக்கறேன். எல்லாம் பேசலாம். நீங்க வறீங்க.

வரேன். ஆனா, ஒரே கண்டிஷன் பேச மாட்டேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!