Home » ஆபீஸ் – 83
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 83

83 புத்தகம் போட்டுப் பார்

கல்யாணம் பண்ணிப் பார்! வீட்டைக் கட்டிப் பார்! என்று அனுபவஸ்தர்கள் சிரித்துக்கொண்டே தீவிரமாகச் சொல்வதைப்போலப் புத்தகம் போட்டுப் பார்! என்பதற்கு அவனே உதாரணமாக ஆகப் போகிறான் என்பதை, ஆரம்பிக்கும்போது அவன் உணர்ந்திருக்கவில்லை.

எல்லாவற்றையுமே கடந்துவந்தபின் எவருடையதோபோல் தள்ளிநின்று  பார்த்து அனுபவமாக எடுத்துக்கொள்கிற அளவுக்கு, இவ்வளவு சின்ன வயதிலேயே பக்குவத்தை அடைந்திருந்தாலும் ஒவ்வொன்றும் நடக்கையில், ஒவ்வொருமுறையும் மனோரீதியாக அவன் படுகிற அவஸ்தைகளையும் மற்றவர்களைப் படுத்துகிற பாட்டையும் சொல்லி மாளாது. அவற்றை ராஜன் போன்ற நண்பர்களிடம் உபகதைகளுடன் விலாவாரியாகச் சொல்கையில் ‘உனக்குனே எப்படில்லாம் நடக்குது பாரு’ என்று பாதி நிஜமாகவும் பாதி கிண்டலாகவும் எதிர்வினைகளை எதிர்கொள்ளவேண்டி இருந்தது. அடுத்தவர் சொல்லைப் பொருட்படுத்துகிற நிலையில் அவன் என்று இருந்தான். இருந்தாலும் அவனுக்கும் நண்பர்கள் இருந்தார்கள் என்பதுதான் ஆச்சரியம். பணம் ஒன்றைத் தவிர தன்னிடம் இல்லாத விஷயமே இல்லை தன்னால் முடியாததே இல்லை என்று அவன் திடமாக நம்பினான். இந்த அசட்டுத்தனமே எல்லோரும் ஒதுங்கி நிற்கிற காரியங்களைச் செய்யவும் யாருமே எதிர்கொள்ளாத ஆபத்துகளைத் தேடிப்போய் இழுத்துவிட்டுக்கொள்ளவும் வாழ்நாள் முழுக்க அவனைத் தூண்டிவிட்டுக்கொண்டே இருந்தது.

பணம்தானே நம்மிடம் இல்லாத விஷயம். அதுவே கிடைத்தபின் வேறென்ன வேண்டும் என்கிற அசட்டுத் துணிச்சலில்தான் எதுவுமே தெரியாமல் புத்தகம் போடுவதிலும் இறங்கிவிட்டான். ஆனால், சிறு வயதிலிருந்தே அவனிடம் இருந்த அடிப்படை வேகம், தனக்குத் தேவை என்றால், எதையும் தெரிந்துகொள்வதில் இருக்கிற ஆர்வம்,எதிலும் இறங்கிவிட்டால் வெறிபிடித்தாற்போல் அதைப்பற்றியே சிந்தித்தபடி முழுமூச்சாய் ஈடுபடுகிற முனைப்பு,தலைகுப்புற விழுந்தாலும் அடிபட்ட வலியில் உள்ளூர அழுதாலும் ஒன்றுமே நடக்காததைப்போலத் தட்டிவிட்டு எழுந்துகொள்கிற இயல்பு என்று எல்லாம் சேர, என்ன நினைப்பார்கள் என்கிற எண்ணமே இல்லாமல் பார்ப்போரிடமெல்லாம் புத்தகம் அச்ச்சு அச்சகம் பேப்பர் போர்டு என்று பைத்தியம்போல பினாத்திக்கொண்டே திரிந்தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!