Home » ஆபீஸ் – 89
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 89

89 ஆமா பொல்லாத ஆபீஸ்

‘பரவால்ல இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துண்டு அடிச்சு முடிச்சுடுங்கோ’ என்று ஏஓ சீதா சொல்லியும் டைப்ரைட்டர் எதிரில் உட்கார்ந்திருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிரத் தன்னால் வேறு ஒன்றும் செய்யமுடியாது என்பது தனக்கே தெரியும்போது இன்னும் கொஞ்சநேரத்தில் மட்டும் என்ன ஹாலிவுட் சயன்ஸ் ஃபிக்‌ஷன் படம் போல எழுத்துகள் தானாக அடித்துக்கொள்ளப் போகின்றனவா என்றுதான், ‘இல்ல மேடம். போதும். நீங்க வேண்டிய டைம் குடுத்தும் என்னால முடியல. இதுக்கு மேல மட்டும் என்ன ஆகிடப் போறது’ என்று, ட்ர்ர்ரக் ட்ர்ர்ரக் என சத்தமெழ, உருளையின் பக்கவாட்டுப் பிடியைத் திருகி, இரண்டு சுட்டு விரல்களை மட்டுமே பயன்படுத்தித் தப்பும் தவறுமாய் நான்கே வரிகளைத் தட்டி வைத்திருந்த பேப்பரை, டைப்ரைட்டரில் இருந்து உருவி எடுத்து அவர் கையில் கொடுத்துவிட்டு வெளியில் வந்தான்.

இப்படியாக டைப்ரைட்டிங் டெஸ்ட்டில் பாசாகாமல் போனதால், எல்லோரும் வாங்குகிற வருடாந்திர இன்கிரிமெண்ட் இல்லாது, சேர்ந்தபோது வாங்கிய 190 பேசிக் பேவிலேயே அவன் சம்பளம் கட்டையாக இந்த வருடமும் இருந்தாக வேண்டும் என்பதில் ஒட்டுமொத்த ஆபீஸும் அவனுக்காக வருத்தப்பட்டது.

‘ஏன் எழுந்து வந்துட்டீங்க. அதான் ஏஓ மேடம் டைம் எடுத்துக்கச் சொன்னாங்கில்ல. நல்லா டைம் எடுத்துக்கிட்டு பொறும்மையா ஒவ்வொரு எழுத்தா அடிச்சு முடிச்சிருக்கலாமில்ல’ என்று விஸ்வநாதன் சொன்னதைக் கேட்டு லதாவும் நிர்மலாவும் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டதைப் பார்த்தபோதுதான் தான் கிண்டலடிக்கப்படுகிறோம் என்பதே அவனுக்குப் புரிந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!