Home » நாள்
சிறுகதை

நாள்

ஓவியம்: லிசா

மூன்று தசாப்தங்கள் முடிந்து விட்டன. சிறிது பிரமிப்புத்தான். வட துருவமும் தென் துருவமுமாகவே வாழ்ந்து வந்தாலும் நானும் என் மனையாளும் முப்பது வருடங்கள் பிரியாமல் இருந்திருக்கிறோம் என்பது சாதனைதான். பிரிய வேண்டுமென்ற எண்ணம் ஒரு தடவை கூட மனதில் தோன்றியதில்லை என்பது முக்கியம். அவளுக்கும் அப்படித்தான் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

நான் ஒரு நாத்திகன். அவள் கும்பிடாத கடவுள் இல்லை; பிடிக்காத விரதமில்லை. நான் ஒரு மாமிச பட்சிணி. அவள் தாவர யட்சிணி. செவ்வாயும் சனியும் என்னைப் பொறுத்தவரை சூரியனை வலம் வரும் கோள்கள். அவளுக்கு அவை நமது வாழ்வை நிர்ணயிக்கும் பலம் வாய்ந்த கிரகங்கள். இன்னும் சொல்லலாம். பொடியளவு விவகாரத்திலும் நாங்கள் பொருந்திப் போனதே இல்லை.

நம்பிக்கைகள் மட்டுமல்ல. இருவரது பலங்களும் பலவீனங்களும் கூட முரணானவை. ஆனாலும் அப்படி முரணான பலங்களும் பலவீனங்களும் எமது குடும்ப வாழ்க்கைக்கு ஒட்டுமொத்தமாகப் பலமாகவே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். உதாரணமாக எனக்கு வீட்டு வரவு செலவுக் கணக்குகள் பார்ப்பதோ அல்லது பட்ஜட் போட்டுச் செலவு செய்வதோ சரி வராது. ஆனால் அவளோ ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்குப் பார்ப்பாள். அதனால் அவளது பலம் எனது பலவீனத்தைச் சரி செய்து எங்கள் குடும்ப நிதி நிலைமையைச் சீராக வைத்திருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!