Home » மாதமெல்லாம் திருவிழா
ஆன்மிகம்

மாதமெல்லாம் திருவிழா

அம்மனை வழிபடும் மாதம் ஆடி, பெருமாளுக்கு விசேஷம் புரட்டாசி, மார்கழி. இப்படி தனித்தனியாக அல்லாமல் அனைத்துத் தெய்வங்களுக்கும் உகந்த மாதமாகப் போற்றப்படுகிறது மாசி மாதம். தவிர, ஆடி, புரட்டாசி, மார்கழி போன்ற மாதங்களில் பல சுப காரியங்களைச் செய்ய முடியாது. ஆனால் இறை வழிபாட்டோடு சேர்த்து இல்ல விழாக்களையும் சுபமாக நிகழ்த்திக் கொள்ளலாம் மங்கள மாதமான மாசியில்.

மாசி மாத மக நட்சத்திரத்தில்தான் திருமால் மஹாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தார். சிவபெருமான் தனது அறுபத்து நான்கு திருவிளையாடல்களையும் மாசி மாதத்தில்தான் நிகழ்த்தினார் என்கின்றன புராணங்கள்.

மாதாமாதம் சிவராத்திரி வந்தாலும் மாசியில் வருவதுதான் மஹாசிவராத்திரியாக் கொண்டாடப்படுகிறது. அதே போலதான் விநாயகருக்கு உகந்த ‘மஹாசங்கடஹர’ சதுர்த்தியும்.

சுவாமி மலையில், தந்தையான சிவபிரானுக்கு பிரணவப் பொருளை முருகப் பெருமான் உபதேசம் செய்தது மாசி மாதப் பூச நட்சத்திரத்தன்றுதான். ஆகவே மந்திர உபதேசம் பெறுதல், உயர்கல்வி, கலைகளைக் கற்றல் போன்ற செயல்பாடுகளைத் தொடங்க இம்மாதம் உகந்ததாகச் சொல்லப்படுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு தெரியாத விஷயங்கள் இது….

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!