Home » லயோலா என்ற பெரும்பாம்பின் கதை
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

லயோலா என்ற பெரும்பாம்பின் கதை

பீட்டர் ஹாக்ஸ்

ஜெர்மனில்: பீட்டர் ஹாக்ஸ் (21 March 1928 – 28 August 2003)
ஆங்கிலத்தில்: ஹெலீன் ஷெர்
தமிழில்: சுகுமாரன்


அங்கிள் டைட்டஸ் ஓர் ஆணி வாங்குவதற்காக, ஷீவார்ஸ்வாசர் பகுதிக்கு வியாபார ரீதியாகப் பயணம் மேற்கொண்டிருந்தார். புகைவண்டி நிலையத்தில் பயணச் சீட்டுக் கொடுக்குமிடத்தில் பின்வருமாறு அச்சிட்ட வெள்ளைக் காகிதத்தைக் கண்டார்: ‘அன்பான பயணியே! உங்கள் பயணத்தின்போது யாராவது, எப்போதாவது ஒரு பிராணியை உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தால் தயவுசெய்து மறுத்துவிட வேண்டாம். எங்களுக்கு அதைக் கொண்டு வாருங்கள், நன்றி. ஹாலே மிருகக் காட்சி சாலை.’ அங்கிள் டைட்டஸ் அந்த அறிவிப்பைக் கோட்டுப் பைக்குள் போட்டுக் கொண்டார். புகை வண்டியேறி ஷீவார்ஸ்வாசர் போய்ச் சேர்ந்தார். ஆணியையும் வாங்கிக் கொண்டார். வீதியொன்றில், கறுப்பு நிறக் கைக்குட்டையைத் தலையில் சுற்றிக்கொண்டிருந்த முதுகு கூன்விழுந்த கிழவி ஒருத்தி அவருக்கு முகமன் கூறினாள்: “தயவுள்ள ஐயா! உங்களுக்குப் பிராணி எதுவும் தேவையாக இருக்கவில்லையா?” என்று கேட்டாள். “வாஸ்தவத்தில் தேவைதான். நீங்கள் ஏன் அதைக் கொடுக்கக் கூடாது?” என்று அங்கிள் டைட்டஸ் கேட்டார். “நகர்ப்புறத்திலுள்ள என்னுடைய பண்ணை வீட்டில் வசிக்கிறது அது. சமீப வருடங்களில் அது மிகவும் பெரிதாகிவிட்டது. ஆகவே அதைக் கொடுத்துவிட விரும்புகிறேன்” என்றாள் கிழவி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!