Home » ஓரு குடும்பக் கதை – 8
குடும்பக் கதை தொடரும்

ஓரு குடும்பக் கதை – 8

8. கடிதங்களில் வாழ்தல்

அது 1905 ஆம் ஆண்டு. ஆனந்த பவன் ரேஷன் கார்டில் ஒரு புதிய உறுப்பினர் சேர்ந்தார். ஜவஹர் பிறந்த அதே நவம்பர், அதே 14ம் தேதி இந்தக் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ரத்தன் லால் என்று பெயர் சூட்டினார்கள். ஆனால் அக்குழந்தை ஒரு மாதம் கூடத் தங்கவில்லை. மோதிலால், அந்தச் சோகத்தை மகன் ஜவஹரிடம் பகிர்ந்துகொள்ளவும் தவறவில்லை. என்றாலும் இந்த சோகம் ஜவஹரின் படிப்பை பாதித்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனம் காட்டினார்.

படிப்பு, உடற்பயிற்சி, துப்பாக்கி சுடுதல், மாணவர் படையில் அங்கம் வகிப்பது போன்றவற்றில் தீவிர ஆர்வம் காட்டி வந்தார் ஜவஹர். அதோடு அவருக்கு கிரிக்கெட் மீதும் திடீர் விருப்பம் ஏற்பட்டது. உடனே அதற்குத் தேவையான கிரிக்கெட் மட்டை உள்ளிட்ட உபகரணங்களை எல்லாம் வாங்கி விட்டார். அதைக் கொண்டு பள்ளியில் உள்ள கிரிக்கெட் அணியில் சேர்ந்து விளையாடவும் தொடங்கினார். நாளடைவில் ஈடன் பள்ளியின் கிரிக்கெட் அணியுடன் மேட்ச்சுகளிலும் பங்கேற்றார். ஒரு நாளிதழின் விளையாட்டு நிருபரைப் போல தனது மேட்ச் அனுபவங்களை அப்பாவுடன் கடிதங்களில் பகிர்ந்து கொண்டார் மகன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!