Home » கடவுளுக்குப் பிடித்த தொழில் – 27
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 27

மரபணுத் தொகுப்பின் உறுதித்தன்மையை பாதிக்கும் காரணிகள்

உயிரிகளின் மரபணுத் தொகுப்பானது இருவிதமான காரணிகளினால் பாதிக்கப்படக்கூடும். ஒன்று புறக்காரணிகள் (exogenous) மற்றொன்று அகக்காரணிகள் (endogenous). வேதியியல் கூறுகள், கதிர்வீச்சு, சூரியனின் புற ஊதாக் கதிர்கள், உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுப் பொருட்கள், சிலவகையான உயிரியல் காரணிகள் உள்ளிட்டவை புறக்காரணிகளுள் அடங்கும். நமது செல்களுக்குள்ளே இருந்தே செயல்படுபவை அகக் காரணிகள் ஆகும். அகக்காரணிகளைப் புறக்காரணிகள் போல வரிசைப்படுத்துவது சற்றுச் சிரமமானது. ஏனெனில் செல்களின் பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் பல்வேறு விதமான பிரச்சனைகளினால் மரபணுத் தொகுப்பின் உறுதித்தன்மை பாதிக்கப்படக்கூடும்.

நமது செல்களில் உள்ள மரபணு சரியான நிலையில் இயங்குவதற்கும், அவற்றின் கட்டமைப்பிற்கும், செல் பிரிதலின்போது இந்த மரபணுக்கூறுகள் பிரிவதற்கும், மேலும் புறக்காரணிகளினால் ஏற்படும் பிரச்சினைகளைச் சரி செய்வதற்கும் நமது செல்களில் பல நூற்றுக்கணக்கான மூலக்கூறுகளும் நொதிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் எவை பாதிக்கப்பட்டாலும் அது மரபணுத் தொகுப்பின் உறுதித் தன்மையினைப் பாதிக்கும். இவை சம்பந்தமான அனைத்தும் அகக் காரணிகளுக்குள் அடங்கும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!