Home » கடவுளுக்குப் பிடித்த தொழில்- 28
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில்- 28

தெய்வத்துக்கே வரும் சோதனை

நமக்கெல்லாம் ஒரு சோதனை வந்தால் தெய்வத்திடம் போய் முறையிடலாம். அந்தத் தெய்வத்துக்கே சோதனை வந்தால்….? நமது உடலில் மரபணுப் பிழைகளைச் சரி செய்வதற்கென்றே சில மரபணுக்கள் உள்ளன என்று பார்த்தோம் அல்லவா? இவற்றினைப் பொதுவாகப் பழுதுபார்க்கும் மரபணுக்கள் எனலாம். சாதாரண மரபணுக்களில் பிழை வந்தால், இந்த பழுதுபார்க்கும் மரபணுக்களிலிருந்து உருவாகும் புரதங்களும் நொதிகளும் போய் உடனடியாகப் பிரச்சினைகளைச் சரி செய்யும். ஆனால் அந்த பழுதுபார்க்கும் மரபணுக்களிலேயே பிழை ஏற்பட்டால் என்ன செய்வது?

நடுத்தர வயதுடைய ஓர் ஆரோக்கியமான மனிதரின் உடலில் இருக்கும் ஓர் ஆரோக்கியமான செல்லினை எடுத்துக்கொண்டால் கூட அதில் ஆயிரக்கணக்கான மரபணுப் பிழைகள் இருக்கும். நமது மரபணுத் தொகுப்பின் மிகப் பெரும்பான்மையாக இருப்பது இன்ட்ரான் (intron) எனப்படும் மரபணுக்களுக்கிடையேயான புரதங்களைக் குறிக்காத ஓர் அர்த்தமற்ற பகுதி என்பதால் இந்த மரபணுப் பிழைகள் உடலின் செயல்பாட்டில் மிகப் பெரிய அளவிலான மாற்றங்கள் எதையும் உடனடியாக ஏற்படுத்துவதில்லை. (குறிப்பு: அர்த்தமற்ற பகுதி என்று குறிப்பிட்டுள்ளதால் இவற்றினைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். இவற்றிற்கு வேறுவிதமான பல முக்கியப் பணிகள் உண்டு. அதனைப் பற்றி பிறிதொரு சமயத்தில் காண்போம். இவை புரதங்களைக் குறிக்கும் மொழியில் இல்லை என்பதனால் மட்டுமே இங்கு அர்த்தமற்ற பகுதி எனக் குறிப்பிடுகின்றோம்).

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!