Home » கடவுளுக்குப் பிடித்த தொழில் -31
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் -31

உணவும் ஆயுளும்

கட்டுப்பாடற்ற ஊட்டச்சத்து உணர்திறன்

நமது உடலிலுள்ள அனைத்துச் செல்களிலும் ஊட்டச்சத்துக்களை உணர்வதற்கான நூற்றுக்கணக்கான கூறுகள் (Components) உள்ளன. இது ஒரு சிக்கலான வலைப்பின்னல் (Network) போன்ற அமைப்பு. இந்த வலைப்பின்னலில் செல்களின் வெளிப்புறத்தில் இருக்கும் ஏற்பிகள் (receptors) தொடங்கி, அதனைக் கடத்தி பல்வேறு தொடர் விளைவுகளை ஏற்படுத்தும் செல்களுக்குள்ளேயே அமைந்திருக்கக்கூடிய சமிக்ஞை அடுக்குகள் (Intracellular signaling cascades) வரை ஏராளமான புரதங்கள் உள்ளிட்ட கூறுகள் (Components) பங்கு கொண்டிருக்கும். இந்த வலைப்பின்னலில் உள்ள கூறுகளின் செயல்பாடுகள் குறையும்பொழுது வாழ்நாள் அதிகரிப்பதாக ஆய்வகங்களில் பல்வேறு விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, வயதான மூதாட்டிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அவர்களின் உடலில் மேலே கூறப்பட்டுள்ள வலைப்பின்னலில் உள்ள கூறுகள் குறைந்திருக்கும்பொழுது அவர்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களிடத்தில் வயதான பின் பொதுவாக ஏற்படக்கூடிய உடல் நிலை மாற்றங்கள் காணப்படுவதில்லை அல்லது மிகத் தாமதமாகத்தான் ஏற்படுகின்றன. உதாரணமாக அவர்கள் சிறந்த நினைவுத்திறன் (Cognitive abilities) கொண்டவர்களாக இருக்கின்றனர். நீரிழிவு நோய் (Diabetes), இரத்த அழுத்தம் (Blood Pressure), எலும்புப்புரை (Osteoporosis) உள்ளிட்ட பிரச்சினைகளும் அவர்களிடத்தில் மிக அரிதாகவே காணப்படுகின்றன. மாறாக இந்த ஊட்டச்சத்து உணர்திறன் வலைப்பின்னலில் உள்ள கூறுகளை உடலில் அதிகமாகக் கொண்டுள்ளவர்கள் பல்வேறு வயது மூப்பு சம்பந்தமான அறிகுறிகளை ஒருங்கே கொண்டவர்களாக உள்ளனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!