Home » கதை – 3: ந. ஜெயரூபலிங்கம்
சிறுகதை

கதை – 3: ந. ஜெயரூபலிங்கம்

தூரத்திலேயே அந்த உருவம் என் கண்களுக்குத் தெரிந்தது. சுவரோடு சாய்ந்தபடி இருந்த அவ்வுருவம் தலையில் ஒரு கம்பளித் தொப்பி அணிந்திருந்தது. மேல்பகுதியில் ஒரு விண்டர் கோட் போன்ற ஆடை. இடுப்புக்குக் கீழ் முழுமையாக ஸ்லீப்பிங் பாக் ஒன்றில் புகுத்திக் கொண்டு இருந்தது.

ஸ்லீப்பிங் பாக் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உபகரணம் முக்கியமாக கேம்பிங் போகும் போது பயன்படுத்துவர். அல்லது வீட்டிற்கு யாராவது விருந்தினர் வந்து தங்கினால் அவர்களுக்குக் கொடுக்கக் கட்டில் இல்லாத பட்சத்தில் காற்றடிக்கப்படும் தற்காலிக மெத்தையிலோ அல்லது சோபாவிலோ படுப்பதற்கோ பயன்படுத்தப்படும். அதன் ஸிப்பினை முழுதாக மூடினால் ஒரு சாதாரண உயரமுள்ள ஒருவரின் முழு உருவத்தையும் அந்த உறைக்குள் புகுத்தி விடலாம். படுக்கையில் படுக்கும் போது மேலே போர்த்துக் கொள்ள குயில்ட் அல்லது பிளாங்கட் போல் குளிரிலிருந்து பாதுகாக்கும். குளிர்காலத்தில் வீட்டிற்குள் இருக்கும் குளிருக்கோ அல்லது கோடை காலத்தில் காம்பிங் போகும்போது வெளியில் இருக்கும் குளிருக்கோ அது மிகவும் சிறப்பானது. எவ்வளவு தடிமனானதாக இருந்தாலும் ஜனவரி மாதத்தில் இங்கிலாந்தில் வெளியே இருக்கக் கூடிய கடும் குளிரிலிருந்து முழுமையாகப் பாதுகாக்கும் என்பதில் எனக்கு ஐயமுண்டு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!