Home » உருப்படாத கூட்டணியும் சரிப்படாத தலைமையும்
இந்தியா

உருப்படாத கூட்டணியும் சரிப்படாத தலைமையும்

பாரதிய ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்திவிடக் கூடாது என்ற ஒற்றை இலக்குடன் தொடங்கப்பட்டாலும்  இண்டியா கூட்டணி தொடக்கம் முதலே ஒரு ஒட்டுப் போட்ட கூட்டணிதான் என்று நாட்டுக்கே தெரியும். எதிர்பார்த்தது போலவே இப்போது அது  பிளவுபடத் தொடங்கி விட்டது. மாநிலக் கட்சிகளுக்கு உரிய மரியாதையைக் காங்கிரஸ் கட்சி கொடுக்கவில்லை. பா.ஜ.க.வை எதிர்த்து வலுவாகப் போட்டியிட வேண்டும் என்ற விருப்பம் அவர்களுக்கு இல்லை. சிலபல தொகுதிகளுக்காக இந்தியாவை ஆட்சி செய்யும் வாய்ப்பை இழக்கப் பார்க்கிறது காங்கிரஸ். இப்படி காங்கிரசின் மீது பல விமர்சனங்களை வைத்துள்ளது திரிணமுல் காங்கிரஸ். மேற்கு வங்கத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாகவும் முடிவு செய்து அறிவித்து விட்டது.

தேர்தல் முடிந்து முடிவுகள் வந்தபிறகு இண்டியா கூட்டணி பற்றிப் பரிசீலிப்போம். அதுவரை இண்டியா கூட்டணி இந்தியாவில் இருக்கட்டும். மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை காங்கிரசோடு இனி திரிணமுல் காங்கிரசுக்கு எந்த உறவுமில்லை. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்கும் திறன் திரிணமுல் கட்சிக்கு மட்டுமே இருக்கிறது எனச் சொல்லியிருக்கிறார் மம்தா பானர்ஜி.

மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டது மேற்கு வங்கம். இங்குக் காங்கிரஸ் கட்சி வலுவாக இல்லை. 2014 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் முறையே நான்கு மற்றும் இரண்டு இடங்களில் வென்றது. இதைக் கருத்தில் கொண்டு 2024-ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டு இடங்களை மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்க முன்வந்தார் மம்தா பானர்ஜி. ஆனால் காங்கிரஸ் பத்துக்கும் மேற்பட்ட இடங்களைக் கேட்டு அடம்பிடிப்பது தான் மம்தா தனித்துப் போட்டியிடும் முடிவை எடுப்பதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!