Home » இம்ரான் கானின் ‘அல் காயிதா’வும் இருப்பியல் நெருக்கடிகளும்
உலகம்

இம்ரான் கானின் ‘அல் காயிதா’வும் இருப்பியல் நெருக்கடிகளும்

பதவியை விட்டு வெளியே போகும் ஒரு பிரதமர் அல்லது அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு வைப்பது உலக ஒழுக்கம். இங்கே அங்கே என்ற பாகுபாடின்றி எங்கும் நடப்பது; எப்போதும் உள்ளது. பாகிஸ்தான் ஒரு தனித்துவம் மிக்க தேசம் என்பதால் சும்மா குற்றம் சாட்டிக்கொண்டிராமல், முதற்கண் பிடித்து உள்ளே போட்டுவிடுவார்கள். அதன் பிறகு ஏதாவது விவகாரம் இருக்கிறதா என்று தேடி எடுத்து, செருப்புக்கேற்ற காலைத் தைப்பார்கள். சரியாக வரவில்லை என்றால் மொத்தமாக மோட்சம் கொடுத்து அனுப்பிவிடப் பார்ப்பார்கள்.

சென்ற வாரம் அங்கே முன்னாள் பிரதமர் இம்ரான் கானைக் கைது செய்து நீதி மன்றத்தில் நிற்க வைத்த காட்சியை டிவியில் பார்த்திருப்பீர்கள். ஒரு சிறிய, எதிர்பாராத விஷயம் என்னவென்றால் ‘இது அநியாயம், அக்கிரமம்’ என்று நாடெங்கும் மக்களே கொதித்துப் போய் ஊர்வலமெல்லாம் போனார்கள். சில இடங்களில் கலவரம் மாதிரி சிலவும் நடந்திருக்கின்றன. இரண்டாயிரம் பேர் கைது. சுமார் பத்து பேர் மரணம். முன்பெல்லாம் இப்படிக் கலவரம் என்றால் ஊரடங்கு போடுவார்கள். கடைகளை அடைக்கச் சொல்வார்கள். காலம் மாறிவிட்டதல்லவா? பாகிஸ்தானில் இணையத்தைத் துண்டித்துவிட்டார்கள். எவனாவது எதையாவது எழுதி வைப்பான். அல்லது விடியோ போடுவான். எதற்கு வம்பு?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்