Home » புதிய சி.இ.ஓவும் பழைய ஹாங்காங்கும்
உலகம்

புதிய சி.இ.ஓவும் பழைய ஹாங்காங்கும்

கொண்டாட்டத்துக்கு சீன அதிபர் வந்தபோது..

ஹாங்காங், சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருபத்தைந்து வருடங்கள் ஆகின்றன. வளர்ச்சி எப்படி இருக்கிறது?

பிரிட்டிஷார் பிடித்து வைத்திருந்த ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்த நாள் ஜூலை ஒன்றாம் தேதி. அன்றைய தினம் ஹாங்காங்கிற்குப் பொது விடுமுறை. அதுவும் சீனாவுடன் ஹாங்காங் இணைந்து இந்த வருடத்தோடு இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. இதே நாள் 1997-ஆம் ஆண்டில்தான் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் ஹாங்காங் வந்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு ஒப்பந்தம் செய்திருந்தபடி, தம் வசம் இருந்த ஹாங்காங்கை சீனாவிடம் முறைப்படி ஒப்படைத்தார். ஆக, இது இணைப்பு நாளுக்கு வெள்ளி விழா ஆண்டு. கொண்டாட்டத்திற்குக் கேட்க வேண்டுமா?

இருக்கட்டும். எப்படி ஹாங்காங் சீனாவிடமிருந்து பிரிட்டிஷ் அரசுக்குச் சென்றது? உங்களுக்கு ஓப்பியம் போர் நினைவில் இருக்கலாம். (இரண்டு யுத்தங்கள். 1839ல் முதல் யுத்தம்.) அல்லது கூகுளைக் கேட்டால் கொண்டு வந்து கொட்டும். அது எல்லாம் இங்கே அவசியம் இல்லை. அதற்குப் பிறகு நூற்று ஐம்பது ஆண்டுக் காலம் பிரிட்டிஷார்தான் ஹாங்காங்கை ஆண்டனர். இடையில் வந்தது இரண்டாம் உலகப் போர். அப்போது நான்கு ஆண்டுகள் மட்டும் ஹாங்காங்கை ஜப்பான் ஆண்டிருக்கிறது.

சூரியன் அஸ்தமிக்காத தேசம் என்று புகழப்பட்ட இங்கிலாந்து. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சுதந்திரம் அளித்த தேசம் அல்லவா? அது போலவே ஹாங்காங்கிற்கும் ஓர் ஒப்பந்தம் போட்டது. 1984- ஆம் ஆண்டில் போடப்பட்ட அந்த ஒப்பந்தத்தில் 1997-இல் ஹாங்காங்கை சீனா வசம் ஒப்படைப்போம் என்பதுதான் அதில் இருந்த வாக்குறுதி. இதன்படி ஹாங்காங்கில் ஒரு நாடு இரண்டு சிஸ்டம் முறை அமலுக்கு வந்தது…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!