Home » பங்கு, பணம், பிரம்மாண்டம்
வரலாறு முக்கியம்

பங்கு, பணம், பிரம்மாண்டம்

இப்போதென்றில்லை; கடந்த இருபது முப்பது வருடங்களாகவே, உலகத்தின் பெரும் பணக்காரர் யார் என்றால் ஓரளவு விவரம் தெரிந்தவர்கள் உடனே பில் கேட்ஸைச் சொல்வார்கள். இன்னும் சிறிது கூடுதல் விவரம் தெரிந்தவர்கள் சொல்லும் இன்னொரு பெயர் வாரன் பஃபட். இந்த இரு பெயர்களும் உலகின் பணக்காரர்கள் பட்டியிலில் மாறாமல் சுமார் முப்பது வருடங்களாகவே முதலிடங்களில் இருந்து வந்தன.

பில், புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர். இன்றும் கணினி உலகின் 75 சதவிகிதத்து சந்தைப் பங்கை தன்னிடத்தே வைத்துக் கொண்டிருப்பது மைக்ரோ சாப்ஃட் நிறுவனம்.

வாரன் பஃபட்டுக்கு இப்போது வயது 91. ஏறக்குறைய அவரது 60, 65 வயதிலிருந்தே உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இருந்தாலும் இருந்திருப்பார். அப்படி நிலைத்த பெரும் பணக்காரராக இருக்க அவர் செய்யும் தொழில்தான் என்ன?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!